ட்ரூகாலர் மக்களின் பிரைவசியைப் பாதிக்கிறதா?

‘ட்ரூகாலர்’ காரி கிருஷ்ணமூர்த்தி சிறப்புப் பேட்டிஞா.சுதாகர்

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போல இன்று பலரது மொபைலில் இருக்கும் முக்கியமான ஆப்களில் ஒன்று ட்ரூகாலர் (TrueCaller). நமது போன் புக்கில் இல்லாத எண்களில் இருந்து அழைப்புகள் வரும்போது அது யாருடையது எனக் காட்டுவது, ஸ்பேம் அழைப்புகளை அடையாளம் காட்டுவது போன்ற வற்றால், பலரது குட்புக்கில் இடம்பெற்றிருக்கிறது ட்ரூகாலர். இந்த நிறுவனத்தின், ஆசியா மற்றும் இந்தியாவுக்கான வளர்ச்சி மற்றும் வர்த்தக உறவுகளுக்கான (Growth and Partnerships) துணைத் தலைவர் காரி கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவரைச் சந்தித்து பேட்டி கண்டோம்.

ட்ரூகாலர் நிறுவனத்தில் நீங்கள் எப்படி நுழைந்தீர்கள்?

‘‘கோவையில் முதலில் பிரபல டெலிகாம் நிறுவனங்களில்தான் பணிபுரிந்து வந்தேன். பிறகு 2008-ல் டெல்லி சென்றேன். டெலிகாம் துறையில்தான் நிறைய அனுபவங்களைப் பெற்றேன். நல்ல வேலை, நல்ல சம்பளம் என இருந்தேன். ஆனால், அப்படி இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. Never Settled என்பது எனக்கு மிகவும் பிடித்த வாசகம். எனவே, அடுத்து என்ன செய்யலாம் என நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். 2013-ம் ஆண்டு பிப்ரவரியில் என் நண்பர் மூலமாக எனக்கு ட்ரூகாலர் ஆப் அறிமுகமானது. முதல்முறை பயன்படுத்தியவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

இணையதளத்தில் ட்ரூகாலர் நிறுவனர் நாமிக்கு, ஒரு மெசேஜ் அனுப்பினேன். “ட்ரூகாலர் ஆப் மிக நன்றாக இருக்கிறது. அதற்கு இந்தியாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இந்தியாவில் ட்ரூகாலர் நிறுவனத்தை வளர்ப்பதற்காக என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?” எனக் கேட்டேன்.

 சரியாக ஆறு நிமிடங்களில் எனக்கு பதில் அனுப்பினார் நாமி. ‘‘நீங்கள் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?’’ என அவர் என்னிடம் கேட்டார். நானும் சில மாதங்கள் இது பற்றி கொஞ்சம் ஆராய்ந்து சில கருத்துக்களை அவருக்கு  அனுப்பினேன். வெகு விரைவில் அவர் என் நண்பராகிவிட்டார். பிறகுதான் நாங்கள் இணைந்து செயல்பட ஆரம்பித்தோம். ட்ரூகாலரை இந்தியாவில் அனைவரிடமும் கொண்டு செல்ல நாங்கள் முயற்சி செய்தோம்.’’

 ட்ரூகாலர் நிறுவனம் துவங்கப்பட்ட நேரத்தில், அதன் தேவை என்னவாக இருந்தது?


“2009-ல்தான் ட்ரூகாலர் நிறுவனம் ஆரம்பிக்கப் பட்டது. எங்கள் நிறுவனர்கள் ஆலன் மற்றும் நாமி இருவரும், தங்களுக்காகத்தான் முதலில் இதனை வடிவமைத்தனர். ஆனால், அதற்குக் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, இது அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட்டது. 2011-ல் முதல் முறையாக ஆண்ட்ராய்டு ஆப் வெளியானது. உலகளவில் எங்கள் நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை வெறும் 70 பேர்தான். 2 பில்லியனுக்கும் அதிகமான எண்கள் எங்களிடம் இருக்கின்றன. இன்று பெரும்பாலோனோர்களின் போனில், அத்தியாவசிய செயலிகளில் ஒன்றாக இது இடம்பிடித்திருக்கிறது. அந்த வகையில் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிதான்.’’

 ட்ரூகாலர் உலகம் முழுதும் இருந்தாலும், இந்தியாவில் தான் பாதிக்கும் மேற்பட்ட பயனாளிகள் இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன?

‘‘நாம் எப்போதும் அடுத்தவர்களுடன் தொடர்பு கொள்வதிலும், உறவைப் பேணுவதிலும் சிறப்பானவர்கள். அதேபோல, எங்கள் நிறுவனம் துவங்கப்பட்ட காலத்தில்தான் இந்தியாவிலும் ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை அதிகரித்தன. மொபைல் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமானது. வாட்ஸ்அப் போலவே, எங்களுடைய ட்ரூகாலருக்கும் அப்போது வரவேற்பு இருந்தது. இந்தியாவில் மட்டும் எங்கள் பயனாளர்களின் எண்ணிக்கை 13 கோடி பேர். ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்ரூகாலர் ஆகிய மூன்று ஆப்கள்தான் பெரும்பாலோனோரின் மொபைலில் இருக்கின்றன.’’

 ட்ரூகாலரின் ட்ரூ டயலர் வசதியை ஏன் கொண்டு வந்தீர்கள்?

‘‘நமது எல்லோருடைய ஸ்மார்ட் போனிலும் நிச்சயமாக இருப்பது கால்டயலர்தான். ஒரு நாளைக்கு நாம் அதிகம் பயன்படுத்தும் விஷயமும் இதுதான். ஆனால், இதனை யாருமே, ஒரு ஆப்பாகப் பார்ப்பதில்லை. மற்ற வசதிகளில் இருப்பது போன்ற, பெரிய மாற்றங்கள் எதுவும் இதில் வரவில்லை. இதனை மாற்றவே ட்ரூடயலர் சேவையை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். ட்ரூடயலர் மற்றும் ட்ரூகாலர் ஆப் இரண்டும் தற்போது ஒரே ஐகானில் இருக்கும். நாம் அதிகம் கால் செய்யும் நபர்களின் பெயர்கள் Favourites-ல் சேர்ந்துவிடும். அத்துடன் ட்ரூகாலரும் ஒரு ஸ்பேம்கால் தடுப்புச் செயலியாக மட்டும் இல்லாமல், அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் உதவும். ஒவ்வொரு வசதிக்கும் ஒவ்வொரு ஆப் என இல்லாமல், அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்குவதால், வாடிக்கையாளர் களை வேறு பக்கம் செல்லவிடாமல் நம்மால் தடுக்க முடியும். வாடிக்கையாளர்களின் வசதிக்காக எதையெல்லாம் சேர்க்கலாம் என நாங்கள் எப்போதும் யோசித்து வருகிறோம். இப்போது எங்கள் டயலரை 5 கோடி பேர் பயன் படுத்துகின்றனர்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்