கேட்ஜெட்ஸ் ஸ்கேன்

ஞா.சுதாகர்

மோட்டோ Z ப்ளே! (Moto Z play)

விலை:  24,999 ரூபாயில் இருந்து துவங்குகிறது.

மோட்டோ Z மற்றும் மோட்டோ Z ப்ளே என இரண்டு புதிய மொபைல்களை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது லெனோவா நிறுவனம். சிறந்த பேட்டரி திறனுடன் வந்துள்ளது மோட்டோ Z ப்ளே. 3 ஜி.பி.ரேம், ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, ஸ்னாப்டிராகன் 625 ஆக்டோ கோர் பிராசஸர், 32 ஜி.பி மெமரி , 165 கிராம் எடை, 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 3510 mAh, வாட்டர் ரிஃபலன்ட் கோட்டிங், டூயல் சிம் வசதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது Z ப்ளே. 

பின்பக்க கேமரா 16 எம்.பி, முன்பக்க கேமரா 5 எம்.பி., 3 ஜி.பி ரேம் என்பதால், போன் வேகத்துக்குக் குறைவிருக்காது. 1080p Super AMOLED டிஸ்ப்ளே கொண்டிருப்பதால், குவாலிட்டியான வீடியோக்கள் மற்றும் கேம்கள் விளையாடலாம். 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், 8 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும் என்பது இதன் ப்ளஸ் பாயின்ட்.

இந்த போனின் மற்றொரு ஹைலைட், ‘மோட்டோ மாட்ஸ்’ எனப்படும் கூடுதல் இணைப்பு வசதி. இதன் மூலம் ஜே.பி.எல் ஸ்பீக்கர், புரஜெக்டர், ஹாசல்பிளட் கேமரா லென்ஸ், கூடுதல் பேட்டரி என நான்கு வசதிகளையும் எளிதாகக் காந்தம் மூலம் இணைத்துக்கொள்ள முடியும்.

இவை அனைத்துமே சில மணி நேரம் வரை, சொந்த பேட்டரியுடன் இயங்குவதால், நம் போன் பேட்டரியை உடனே பதம் பார்க்காது. அக்டோபர் 17-ம் தேதி முதல் இது விற்பனைக்கு வருகிறது.

ப்ளஸ்:

* மோட்டோ மாட்ஸ்

* டர்போ சார்ஜ் பேட்டரி திறன்

மைனஸ்:

* மோட்டோ மாட்ஸ் இணைப்பதற்கான பகுதி, போன் டிசைனைக் கெடுக்கிறது. இதை மறைக்க, பேக் கவர் வாங்கவேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்