கம்பெனி ஸ்கேன்

- மின்டா கார்ப்பரேஷன் லிமிடெட்!(NSE SYMBOL: MINDACORP)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

டந்த ஐம்பது வருடங்களாக ஆட்டோ மொபைல் துறையில் (செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு) செயல்பட்டு வரும் அசோக் மின்டா குரூப் நிறுவனங்களில் ஒன்றான மின்டா கார்ப்பரேஷன் லிமிடெட். 

மின்டா குரூப் நிறுவனங்கள் கடந்த நிதியாண்டின் இறுதியில் கிட்டத்தட்ட 3,500 கோடி ரூபாய் அளவு வர்த்தகத்தை செய்தது; 15,800-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் (இந்தியா மற்றும் அயல் நாடுகளில்) கொண்டு ஆட்டோமொபைல் துறையில் ஒரு முக்கிய உதிரிப்பாகங்கள் உற்பத்தி செய்யும் குழுமமாகத் திகழ்ந்து வருகிறது. இந்தக் குழுமத்தின் ஒரு அங்கம்தான் மின்டா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ஆகும்.

தொழில் எப்படி?

இந்த நிறுவனம் வாகனங்களுக்கான செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் உற்பத்தி மற்றும் ஆட்டோ மொபைல் துறைக்கான டை காஸ்ட்டிங் உற்பத்தி என்ற இரண்டு தொழில் பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம்  ஆட்டோமொபைல் துறையில் இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் ஆப்-ரோடு வாகனங்களுக்கான எலெக்ட்ரானிக் மற்றும் மெக்கானிக்கல் செக்யூரிட்டி சிஸ்டம்களை சப்ளை செய்யும் மிகப் பெரிய நிறுவனம். மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக் பாதுகாப்பு உபகரணங்கள்,  எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான எலெட்ரானிக் கன்ட்ரோலர்கள் போன்ற  ஓஇஎம் ரக உபகரணங்களைத் தயாரித்து வருகிறது இந்த நிறுவனம். உற்பத்தியில் இருபது சதவிகித அளவை  அமெரிக்கா, இங்கிலாந்து,   ஐரோப்பிய யூனியன், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கு  ஏற்றுமதி செய்துவருகிறது.
 
இந்தியாவில் இரு சக்கர வாகனங்களுக்கான செக்யூரிட்டி உபகரணங்களில் பயன்படுத்தப்படும் காந்தத்தினால் அமைந்த ஷட்டர்களை  (காப்புரிமை பெற்றுள்ளது இந்த நிறுவனம்)  வழங்கிவரும் ஒரே நிறுவனம் இதுதான். இரு சக்கர வாகனங்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக  கன்வென்ஷனல் வகை சாவிகள்,  இரண்டு ட்ராக்குகளைக் கொண்ட சாவிகள், நான்கு ட்ராக்குகளை கொண்ட சாவிகள் மற்றும் ஸ்நேக் பைட்டிங் வகை சாவிகள் மற்றும் லாக் செட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து வருகிறது இந்த நிறுவனம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்