நிஃப்டியின் போக்கு: இறக்கம் இன்னும் கொஞ்சம் தொடரலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

டெக்னிக்கலாக வீக்னெஸ் இன்னும் கனன்று கொண்டுதான் இருக்கிறது என்று சொல்லும் அளவுக்கே நிலைமை உள்ளது என்றும் செய்திகள் நெகட்டிவாக இருக்கும்பட்சத்தில் 8510 மற்றும் 8300 என்ற லெவல்கள் வரையிலான இறக்கம் இன்னும் அருகிலேயே இருக்கிறது என்ற நிலைமையே தொடர்கிறது என்றும் செய்திகளை எதிர்பார்க்கும் சூழ்நிலை நிலவுவதால், பெரும்பாலும் டைரக்‌ஷன்லெஸ் சூழலே இருக்கும் என்றும் சொல்லியிருந்தோம்.

மூன்றே டிரேடிங் தினங்களைக் கொண்டிருந்த வாரத்தில், இரண்டுநாள் சிறிய ஏற்றத்திலும் ஒரு நாள் கணிசமான இறக்கத்திலும் குளோஸான நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 114 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது. பெரிய அளவிலான பொருளாதார டேட்டா வெளியீடுகள் இல்லாத காலாண்டு முடிவுகள் வெளிவரும் வாரம் இது. டெக்னிக்கல் அமைப்பில் பெரிய மாறுதல்கள் இல்லை. ரிசல்ட்கள், செய்திகள் மற்றும் நிகழ்வுகளே சந்தையை எடுத்துச்செல்வதாக இருக்கும். டெக்னிக்கல்கள் இறக்கத்தையே காட்டுகின்றன என்றபோதிலும் செய்திகள் பாசிட்டிவாக இருக்கும்பட்சத்தில் 150 முதல் 175 புள்ளிகள் வரையிலான ஏற்றம் வந்துவிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கிறது. இறக்கம் என்பது 8320 லெவல்கள் வரை உறுதி என்று சொல்லும் அளவுக்கே நிலைமை டெக்னிக்கலாக இருக்கிறது.

வாரத்தின் இறுதியில் மீண்டும் புல்லிஷாக சந்தை மாற வாய்ப்பு இருக்கிறது. ஷார்ட் சைட் வியாபாரம் மற்றும் ஓவர்நைட் வியாபாரம் தவிர்த்து இறக்கம் வந்தால், டெக்னிக்கல் ரெக்கவரியை எதிர்பார்த்து சின்னச்சின்ன லாங் சைட் வியாபாரங்களுக்காக மட்டுமே சந்தையை ஹைரிஸ்க் டிரேடர்கள் ட்ராக் செய்யலாம்.

புதிய டிரேடர்களும், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர் களும் ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரமாக நல்ல ஃபண்டமென்டல்கள் இருக்கும் ஸ்டாக்குகளில் மட்டும் சிறிய அளவிலான லாங் சைட் வியாபாரமாக வியாபா ரத்தை மாற்றி அமைத்துக்கொள் வதே நல்லது எனலாம். எச் சரிக்கை யுடன் செயல்படுங்கள்.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள். விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படை யில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 14-10-16 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து, வரும் வாரத்துக்கு கவனிக்க உகந்த பங்குகள் :  CEREBRAINT-18.15, DIGJAMLTD-13.80, CELEBRITY-12.45, PRIMESECU-38.60, BEPL-24.75, USHERAGRO-11.65, ALEMBICLTD-45.65, ZEEMEDIA-31.35, OIL-417.90, NMDC-11740, RUCHIRA-115.80, SCHNEIDER-164.

ரிலேட்டிவ் மொமொன்டம் ஸ்டடிஸ்  என்ற அளவீட்டில் பார்த்தால் இந்த பங்குகளை டிரேடிங்குக்கு கவனிக்கலாம் :    CROMPTON-177.20, NATIONALUM-51.70, ADANITRANS-42.90, PFS-38.70,  EKC-29.50, CUB-143.90, MGL-725.15, TATAMTRDVR-361.95, CELEBRITY-12.45, ONMOBILE-113.35, SUPERSPIN-19.10, PIDILITEIND-727.60, RAIN-54, PRIMESECU-38.60, TATACHEM-541.40, MOTHERSUMI-330.45, BEPL-24.75, ORIENTPPR-84.80, MEGASOFT-23.25, MANNAPURAM-94.45, PETRONET-400.65, GOKEX-83.60, RAMCOCEM-660.65, JBCHEMPHARM-390.40, BALLARPUR-16.05, TATAMOTORS-556.10, ALEMBICLTD-45.65, ZEEMEDIA-31.35, RADICO-139.20, ONGC-277.05, ELECTCAST-24.95, SUMEETINDS-32.20, MRPL-92.30, NMDC-117.40, ELECON-68.10, RUCHIRA-115.80, SUNFLAG-39.20, SPIC-24.85, JINDALSAW-65.90, GPIL-71.70.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்