ஏற்றத்தில் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பங்குகள்!

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் துறை சார்ந்த பங்குகள், கடந்த ஆறு மாதங்களில் மிகப் பெரிய ஏற்றத்தைச் சந்தித்துள்ளன. இன்றைய சூழ்நிலையில், சீனாவில் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை எடுத்துவருகிற நடவடிக்கைகள்  காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. ‘ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்’  பொருட்களை இதுவரை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துவந்த சீனா,  தற்போது இறக்குமதி செய்து வருகிறது. இந்திய நிறுவனங்கள் இதை சாதகமாகப் பயன்படுத்தி வருவது ஆரோக்கியமான வளர்ச்சி.  இந்தத் துறையின் செயல்பாடுகள், இந்திய நிறுவனங்களின்  பங்களிப்பு, உலக அளவிலான மதிப்பீடுகள், இந்திய நிறுவனங் களுக்குள்ள சவால்கள் எல்லாவற்றையும் பார்ப்போம்.

ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ் என்றால்..?

ஒரு பொருளைத் தயாரிப்பதில், இதன் பங்களிப்பு அளவில் சிறியதாக இருந்தாலும், நிறைவுத்தன்மை அடைவதற்கான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேதியல் பொருளாகக் காணப்படுவதால், இது  ‘ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. சொல்லப்போனால், இவற்றின் பயன்பாட்டு சதவிகிதம் எவ்வளவு  என்பதைவிட அவற்றின் செயல்கள்தான் முக்கியமாக அளவிடப்படுகின்றன அல்லது  முக்கியத்துவம் பெறுகின்றன. இதன் குணாதிசயங்களின் அடிப்படையில் வேறுபடுகின்றன.

பயன்படுத்தப்படும் துறைகள்..!

ஸ்பெஷாலிட்டி பாலிமர்ஸ் :  வாகனத் துறை, கட்டுமானம், மருத்துவம், எலெக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெவ்வேறு துறைகளில்,வெவ்வேறுவிதமான அளவில் சேர்க்கப்படுவதால், இதன் செயல்திறனானது  நீட்புத்திறன், வெப்பத்தை தாங்கும்திறன் என்று பல்வேறு வடிவங்களைப் பெறுவதால், இதன் பயன்பாடு சந்தைகளில்  அதிகரித்துக் காணப்படுகிறது.

வாகனத் துறை :  ரப்பர் கெமிக்கல் களின் பயன்பாடு   மோட்டார் வாகன டயர்கள், சைக்கிள் டயர் மற்றும் டியூப்ஸ், கன்வேயர் பெல்ட், காலணிகள், குழாய்கள் மற்றும் கேபிள் வகைகளில் இதன் பயன்பாடு காணப்படுகிறது.

நீர் சுத்திகரிப்பு : தொழில் சார்ந்த கழிவு நீரை மறு சுழற்சி முறையில் சுத்தப் படுத்துதலிலும், விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர் மற்றும் குடிநீர் ஆகியவற்றின்  தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், குறிப்பிடத்தக்க  மாற்றங்கள் இந்தத் துறையில் நடந்து வருகின்றன.

உலக அளவில் (2016-ல்) தற்போதைய 28.5 பில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பு இன்னும் ஐந்து வருடங்களில் 38.2 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கக் கூடும்  என மதிப்பிடப்பட்டு உள்ளது. சீனா மற்றும் இந்தியா போன்ற  நாடுகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதிலும், தொழில் சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் அதிக முனைப்பு காட்டப்படுவதால், இந்தத் துறை பெரிய அளவில் விரிவாக்கம் காண வாய்ப்புள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்