உங்களை பணக்காரர் ஆக்கும் 4 முதலீட்டு விதிகள்!

கா.இராமலிங்கம், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்.

ணக்காரர் ஆகவேண்டும் என்ற ஆசையும் எண்ணமும் நம் அனைவருக்குமே இருக்கும். நாம் செய்யும் முதலீடுகளையும் இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் மேற்கொள்வோம். ஆனால், முதலீட்டை மேற்கொள்பவர்கள் எல்லோருமே பணக்காரர்கள் ஆகிவிட்டார் களா என்றால், இல்லை என்பதே பதிலாக இருக்கும். அப்படியானால் நமது தவறு என்ன..? எங்கே, எதில், எந்த அளவுக்கு முதலீடு செய்வது என்பதில்தான் நாம் தவறு செய்கிறோம். நம்மை பணக்காரர் ஆக்கும் 4 முதலீட்டு விதிகளை பின்பற்றி னால் அத்தகைய முதலீட்டு தவறுகளைத் தவிர்க்கலாம். அந்த 4 விதிகள் இதோ...

1. வயதுக்கேற்ற முதலீடுகள்!

முதலீட்டாளர்கள் அவர்களுடைய வயதுக்கு ஏற்ற முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலும், இளவயது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில்தான் முதலீடு செய்கிறார்கள். உதாரணமாக, இன்ஷூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்வது, வங்கி ஆட்டோ எஃப்டியில் முதலீடு செய்வது என்று சிலர் தங்களுடைய அன்றாடத் தேவைக்குப் போக மீதிமுள்ள பணத்தை வங்கி சேமிப்புகளிலேயே வைத்துள்ளார்கள். இந்த வகை முதலீடுகள் முதலீட்டு வளர்ச்சிக்கு உதவாது. ஒரு நபர் தன்னுடைய ஓய்வுக்கால நிதியைச் சேர்ப்பதற்கு 40 - 45 வயதைக் கடந்த பின்புதான் சிந்திக்கிறார். அந்த சமயத்தில் அவர்களுக்குத் தேவையான பணத்தைக் குறைந்த காலத்துக்குள் சேர்ப்பதற்கு ரிஸ்க் உள்ள முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய் கிறார்கள். இந்த ரிஸ்க் உள்ள திட்டங்கள் சில சமயம் அவர்களுடைய இலக்கை அடைய முடியாமல் செய்வதுடன், நஷ்டத்தையும் தந்து விடுகிறது. ஆகவே, இளம் வயது உள்ளபோதே ரிஸ்க் எடுத்து நீண்ட காலத் தேவைகளுக்கு முதலீட்டை மேற்கொள்ளவேண்டும். முதுமை அடையும்போது ரிஸ்க் அதிகம் உள்ள முதலீட்டிலிருந்து வெளியேறி பாதுகாப் பான முதலீட்டை மேற்கொள்ளவேண்டும்.

2. முதலீட்டின் தன்மை அறிந்து முதலீட்டை மேற்கொள்ளல்!

ஒவ்வொரு வகையான முதலீட்டுக்கும் ஒவ்வொரு மாதிரியான ரிஸ்க் உள்ளது. ஒருவர் செய்யும் முதலீட்டுத் திட்டங்கள் மற்றவர்களுக்குப் பொருந்தாது. பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் பண்ட், ஈக்விட்டி சார்ந்த முதலீடுகள் அதிக ரிஸ்க் உள்ள முதலீடுகள் ஆகும். அதேசமயம், அவை அதிக வருமானம் தரக்கூடிய முதலீடுகள் ஆகும். அதிக வருமானம் கிடைக்கிறதே என்பதற்காக, அதிலுள்ள ரிஸ்க்கை அறியாமல் அனைத்து முதலீட்டையும் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் மட்டும் முதலீடு செய்யக்கூடாது. பாதுகாப்பான முதலீடு என்பதால் எல்லா முதலீட்டையும், வங்கி எஃப்டி மற்றும் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் முதலீட்டை செய்யவும் கூடாது. இந்த வகை முதலீடுகள் பணவீக்கத்தைத் தாண்டி வருமானம் கொடுக்காது. ஆகவே, ஒரு முதலீட்டாளர், முதலீட்டுக்கு முன் அதிலுள்ள ரிஸ்க், கிடைக்கும் வருமானம், முதலீடு திரும்பக் கிடைக்கும் காலம் போன்றவற்றை எல்லாம் பார்த்து முதலீடு செய்யவேண்டும்.

உங்களுக்குப் புரியாத முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க் கவும். உதாரணமாக, டே-டிரேடிங், எஃப் அண்ட் ஓ, கரன்சி டிரேடிங் போன்ற திட்டங்களைச் சொல்லலாம். இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யும்முன் முழுமையாகப் புரிந்து கொண்டோமா என நமக்கு நாமே எடை போட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். புரிபடாத நிலையில், அந்த வகை முதலீடுகளைத் தவிர்ப்பதே நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்