வெற்றிகரமான பிசினஸுக்கு உதவும் 10 சூப்பர் ஆப்ஸ்...!

ஞா.சுதாகர்

“கையில் ஸ்மார்ட் போன் இன்றி, நாம் ஒருநாளும் இயங்குவதில்லை.  “நம்முடைய டிஜிட்டல் அசிஸ்ட்டென்ட்டாக இருக்கும், இந்த ஸ்மார்ட் போனை மட்டும் நாம் இன்னும் திறமையாக கையாண்டால் போதும். ஒரு பிஸினஸ்மேனுக்கு பாதி வேலை முடிந்துவிடும்” என்கிறார் கே.எஸ்.கமாலுதீன். வெற்றிகரமான ஏற்றுமதியாளராக இருக்கும் அவர், தான் பயன்படுத்தும் ஆப்ஸ்கள் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்கிறார்.

“இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஒரு ஸ்மார்ட் போன் வைத்திருக்கின்றனர். நீங்கள் சிறப்பாகச் செயல்பட, கண்டிப்பாக சில ஆப்ஸ்கள் உங்கள் மொபைலில் இருக்கவேண்டும். அப்படித் தொழில் செய்பவர்களுக்கும், நேரத்தை மிச்சப் படுத்த நினைப்பவர்களுக்கும் நான் பரிந்துரை செய்யும் இந்த ஆப்ஸ்கள் நிச்சயம் உதவும்.

ட்ரூ காலர் (True Caller)

உங்கள் போன் புக்கில் இல்லாத ஒரு நபர் உங்களை அழைக்கும்போது, அது யார் என இதன் மூலம் கண்டறிந்துவிடலாம். அத்துடன் ஸ்பேம் கால்களையும் இது காட்டி விடுவதால், தேவையற்ற கால்களை எடுத்துப் பேசவேண்டிய அவசியம் கிடையாது. இதனால் டெலி ஷாப்பிங் நிறுவனங்கள், விளம்பரங்கள் போன்ற அழைப்புகளை எடுத்துப் பேசவேண்டிய அவசியம் இருக்காது.

 ஸ்கைப் (Skype for Business)

ஸ்கைப் என்னும் வீடியோ சாட்டிங் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். அதே சேவையின் பிசினஸ் வடிவம்தான் இது. இதன் மூலம் பல்வேறு இடங்களில் இருக்கும் அலுவலகங்களில் இருந்து வீடியோ கான்ஃபரன்சிங் முறையிலேயே மீட்டிங் போட முடியும். நிறைய கிளை நிறுவனங்கள் இருக்கும் போது, அவற்றை ஒரே நேரத்தில் ஒருங்கிணைத்து பேச இது உதவுகிறது. ஸ்கைப் வீடியோ, காலிங் சேவைக்கு நல்ல சாய்ஸ் என்பதால், அலுவலக மீட்டிங்குகளை ஒருங்கிணைக்க சிறப்பான சாய்ஸ் இது.

 வைபர் (Viber)

வாட்ஸ்அப் போலவேதான் இதுவும் செயல்படும். ஆனால், இதில் இருக்கும் வீடியோ காலிங் வசதி, வாட்ஸ்அப்பை விட சிறப்பாக இருக்கிறது. மேலும், சில நாடுகளில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதில்லை. அந்த இடங்களில் வைபர் பயன்படும். நான் ஏற்றுமதி தொழிலில் இருக்கிறேன். இதனால் நிறைய இன்டர்நேஷனல் காலிங் செய்யவேண்டிய அவசியம் ஏற்படும்.

அந்த நேரங்களில் வைபர் எனக்கு உதவியாக இருக்கிறது. வாட்ஸ்அப் காலைவிட இதில் டிராபிக் குறைவு என்பது இதன் சிறப்பு. அடிக்கடி வெளிநாடு போகிறவர்கள் டாக்ரே (TalkRay) என்கிற ஆப்ஸையும் பயன்படுத்தலாம். இதுவும் வாட்ஸ்அப் போல இன்ஸ்டன்ட் மெசேஜ் ஆப்தான். இந்த வாட்ஸ்அப்புக்கு பதிலாக இது நிறைய நாடுகளில் பிரபலமாக இருக்கிறது.

 டெலிகிராம் (Telegram)

இது நம்மூரில் ஏற்கெனவே கொஞ்சம் பிரபலமான ஆப்தான். இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப். காலிங் வசதி இதில் இல்லை. அத்து டன் வாட்ஸ்அப்பில் நம்முடைய தகவல்கள் அனைத்தும், நமது மொபைல் மற்றும் கிளவுடில் பதிவாகும். ஆனால், டெலிகிராமில் நம்முடைய போன் மெமரி அப்படியே இருக்கும். தகவல்கள் மேகக்கணினி என்னும் கிளவுடில் மட்டுமே பதிவாவதால், எங்கிருந்து வேண்டுமானாலும், எத்தனை டிவைஸ்களில் வேண்டுமானாலும் நம்மால் இயக்க முடியும். நிறைய பேர் வாட்ஸ்அப்க்கு பதிலாக டெலிகிராமை பயன்படுத்தி வருகின்றனர்.

 டிங்டோன் (Dingtone - Free Phone Calls, Free Texting)

வாய்ஸ்காலிங் போலவே இதுவும் பயன்படும். இதன் சிறப்பு, இரண்டு நபர்கள் வாக்கிடாக்கி போல இதனை உபயோகிக்க முடியும். இந்த ஆப் மூலம், ஒரு புஷ் பட்டன் உபயோகித்து பின்னர், நம் மொபைலை வாக்கிடாக்கி போல மாற்ற முடியும். இதனை 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்த முடியும்.

 பிகோ லைவ் (Bigo Live)

இதன் மூலம் நீங்கள் ஒரு நிகழ்ச்சியை லைவ்-ஆக ஒளிபரப்பு செய்ய முடியும். வெவ்வேறு இடங்களில் இருக்கும் சிலரிடம் ஒரே நேரத்தில் வீடியோ கால் போல பேசவேண்டுமென்றால், இது உங்களுக்கு ஏற்றது. ஃபேஸ்புக் லைவ் போல இது இருக்கும். இதன் மூலம் உங்களுக்கு என ரசிகர்களையும் உருவாக்க முடியும். உங்கள் அலுவலகத்தில் நீங்கள் லைவ்-ஆக உரையாட இந்த ஆப் உதவும்.

 ஐமோ & சோமா (IMO and SOMA - free video call and chat)

ஐமோ மிகவும் பிரபலமான வீடியோ காலிங் ஆப். இலவசமாக எப்போது வேண்டு மானாலும் வீடியோ கால்கள் செய்யலாம். இது பாதுகாப்பானது மற்றும் எளிமையானது. சமீபத்தில் கூகுள் நிறுவனமும் டுயோ என்ற ஆப்ஸை அறிமுகம் செய்திருந்தது. அதுவும் வீடியோ காலிங் ஆப்தான். சோமா ஆப்பும் இதேபோல வீடியோ காலிங் வசதிக்காக இருப்பதுதான். வணிக ரீதியான தொடர்புகளில் வீடியோ காலிங் மிக முக்கியமான விஷயம். அதற்கு இவை சிறந்த ஆப்ஷன்கள்.

 மைஆப்ரேட்டர் (MyOperator - CRM for Calls)

இது ஒரு பிசினஸ்மேனுக்கு மிகவும் உதவியாக இருக்கும் ஒரு ஆப். உங்களுக்கு வரும் கால்களை நிர்ணயிக்க உதவும். நீங்கள் மீட்டிங்கில் இருக்கும் போது, கால்களை எடுக்க மாட்டீர்கள். மீட்டிங் முடித்துவிட்டு வந்து போனை எடுத்துப் பார்த்தால், நிறைய கால்கள் இருக்கும். அவற்றைப் பிரித்து அறிய இது உதவும். மேலும், உங்களுக்கு புது எண்களில் இருந்து நிறைய அழைப்புகள் வரும். அந்த எண்களை எல்லாம் சேமித்து வைக்கமாட்டோம். அந்த சமயத்தில், எந்த கால் எப்போது வந்தது என நோட் போட்டு வைத்து, சேமித்துக்கொள்ளலாம். கால்களை பிளாக் செய்யவும் முடியும். நமக்கு வரும் கால்களை நிர்வகிக்க இது சிறப்பாக உதவும்.

  கேம்கார்டு (Camcard)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்