ஆன்லைன் விற்பனை... ஆச்சர்யப்படுத்தும் 4 டிரெண்டுகள்!

சித்தார்த்தன் சுந்தரம்

விநாயகர் சதுர்த்தியில் ஆரம்பித்து பொங்கலோடு முடியும் ஐந்து மாத பண்டிகைக் காலத்தை சரியாகப் பயன்படுத்தி பெரிய அளவில் விற்பனை செய்து வந்தன இந்தியா முழுக்க உள்ள வணிக நிறுவனங்கள். கடந்த சில ஆண்டுகளாக சில ஆன்லைன் நிறுவனங்களும் போட்டி போட்டு பெரிய அளவில் பொருட்களை விற்கத் தொடங்கிவிட்டன. இந்த வருடம் ஆன்லைன் நிறுவனங்கள் செய்த விற்பனையை வைத்துப் பார்க்கும்போது சில  சுவாரஸ்யமான போக்குகள் (trends) தெரிய வருகின்றன. அந்தப் போக்குகள் இதோ:

சிறுநகரங்களும் ஆன்லைன் பிடியில்!

அமேசான் நிறுவனம் ஐந்து நாட்களுக்கு நடத்திய விற்பனையின்போது நாட்டில் உள்ள மொத்த பின்கோடுகளில் 90 சதவிகித பின்கோடுகளில் இருந்து ஆர்டர் வந்திருந்ததாம். புதிய நுகர்வோர்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதத்தினர் இரண்டாம், மூன்றாம் அடுக்கு நகரங்களைச் சேர்ந்தவர்கள். அமேசானுக்குக் கிடைத்த மொத்த ஆர்டர்களில் 65 சதவிகிதமானோர் பத்து லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் வாழ்பவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்