உஷார், உஷார்...நீங்களும் ஒரு டார்கெட்தான்!

ஜெ.சரவணன்

மும்பையில் கால் சென்டர் நிறுவனம் ஒன்று, கடந்த ஒன்றரை வருடமாக போனில் பேசியே அமெரிக்க மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளை அடித்திருக்கிறது. இந்த கால் சென்டர் நிறுவனத்தில் வேலை பார்த்த 700-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“ஹலோ... அம் ஐ ஸ்பீக்கிங் டு மிஸ்டர்...” என்று ஆரம்பிக்கும் குரல்கள் அடிக்கடி நம் தொலைபேசிகளில் ஒலிக்கிறது. இவர்கள் வங்கியிலிருந்து பேசுவதாகவோ, வருவாய்த் துறை யிலிருந்து பேசுவதாகவோ சொல்வார்கள். இவர் களுக்கு நம்முடைய மொபைல் எண், பான் எண் அல்லது வங்கிக் கணக்கு எண் போன்ற ஏதேனும் சில தகவல்கள் தெரிந்தால்கூட போதும், பிற விவரங்களை நம்மிடம் பேசியே வாங்கிவிடுவார்கள்.

நம்முடைய வங்கிக் கணக்கின் ரகசிய எண்களை வாங்கிக் கொண்டு கிரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து பணத்தைக் கொள்ளை அடிப்பது, கணினியில் புகுந்து நம்முடைய விவரங்களைத் திருடுவது, வருவாய்த் துறையிலிருந்து வரி கட்டாததற்கு அபராதம் விதிப்பது போல் பேசி பணம் பறிப்பது என இவர்களுடைய திருட்டு நாளுக்கு நாள் நூதனமாகிக் கொண்டிருக்கிறது.

எப்படி இதுபோன்ற மோசடிகள் நடக்கின்றன என, சென்னையில் உள்ள பிரபல பிபிஓ சர்வீஸில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் கேட்டோம்.

“பெரும்பாலான வங்கிகளின் ‘பேக் எண்ட் ஆப்ரேஷன்’கள் (Back End Operaion) பிபிஓ-களுக்குத் தான் அவுட்சோர்ஸிங் செய்யப்படுகின்றன. அப்படி இவர்களிடம் வழங்கப்படும் தகவல்கள் நிறுவனங்களிடமிருந்து கசிய வாய்ப்பு அதிகம். அந்தத் துறையில் இருப்பவர்களால் மட்டுமே அதனுடைய வாய்ப்புகளைக் கண்டுபிடிக்க முடியும். பெரிய பொறுப்பில் உள்ளவர்கள், வேறொருவர் பெயரில் வெளியே ஒரு கால்சென்டரைத் தொடங்கி தங்களிடம் உள்ள தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்து வருகிறார்கள்’’ என்றார்.

எச்சரிக்கை மக்களே எச்சரிக்கை!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்