ரிஸ்க்கைக் குறைக்க... லைஃப் சைக்கிள் இன்வெஸ்டிங்!

சேனா சரவணன்

வாழ்க்கையை சுமுகமாக மாற்றிக்கொள்ள லைஃப் சைக்கிள் இன்வெஸ்டிங் (Life-Cycle Investing) அவசியம். அது என்ன  லைஃப் சைக்கிள் இன்வெஸ்டிங் என்கிறீர்களா?

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். இது முதலீட்டுக்கும் 100 சதவிகிதம் பொருந்தும். சிறு வயதிலேயே, அதாவது சம்பாதிக்க ஆரம்பிக்கும் 25 அல்லது 30 வயதில் உங்களின் வாழ்க்கைச் சுழற்சிக்கேற்ப முதலீடு செய்யப் பழகிவிட்டீர்கள் என்றால், அது நிச்சயம் உங்களின் ஓய்வுக்காலம் ஒளிமயமாக இருக்க உதவும். 

லைஃப் சைக்கிள் இன்வெஸ்டிங்கில் இளம் வயதாக இருக்கும்போது, முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்கவேண்டும். அதாவது, அப்போது பங்குச் சந்தையில் உங்களின் முதலீடு அதிகமாக இருக்கவேண்டும். வயதாக வயதாக முதலீட்டில் பங்குச் சார்ந்த முதலீடுகளின் அளவு குறைத்துகொண்டே வரவேண்டும்.

பங்குச் சந்தையில் மூலதனத்தை இழப்பதற்கு அதிக வாய்ப்பு இருந்தாலும், இளம் வயதில் அதில் அதிகம் முதலீடு செய்யச் சொல்வதற்கு முக்கிய காரணம், அந்த வயதில் முதலீட்டு இழப்பைத் தாங்கும் சக்தி அதிகம் இருக்கும் என்பதால்தான். ஒருவேளை பங்கின் விலை குறைந்தால், முதலீட்டாளருக்கு இளம் வயது என்பதால் அது மீண்டும் விலை அதிகரிக்கும்போது விற்று லாபம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்தக் காரணத்துக்காகத்தான் இளம் வயதில் பங்குச் சார்ந்த திட்டங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்கிறார்கள்.

உங்களுக்கு 50 வயதைத் தாண்டும்போது ரிஸ்க்கான முதலீடுகளில் இருந்து, படிப்படியாக முதலீட்டு ரிஸ்க் குறைந்த பேலன்ஸ்டு ஃபண்டுகள், கடன் ஃபண்டுகள், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது குறைத்துக்கொள்ள வேண்டும்.

பணி ஓய்வு பெற்றுவிட்டீர்கள் அல்லது 60 வயதைத் தாண்டிவிட்டீர்கள் என்றால் ரிஸ்க்கான நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளிலிருந்து வெளியேறி, மூலதனத்துக்கு உத்தரவாதமான முதலீட்டுத் திட்டங்களுக்கு (கடன் ஃபண்டுகள், ஃபிக்ஸட் டெபாசிட்கள்)  மாற்றிக்கொள்ள வேண்டும். நீங்கள் எப்போது சம்பாதிப்பதை நிறுத்துகிறீர்களோ, அப்போது முதலீட்டில் ரிஸ்க் எடுப்பதை நிறுத்திவிடவேண்டும். அப்போதுதான் உங்கள் ஓய்வுக்காலம் ஒளிமயமாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்