உலகின் விலை உயர்ந்த டாப் 10 பங்குகள்!

ஜெ.சரவணன்

ரே நாளில் பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தின் பங்குதாரராக ஆகவேண்டும் என்றால் பின்வரும் நிறுவனங்களின் பங்குகளில் ஒன்றை வாங்கினால் போதும். இவற்றில் பெரும்பாலானவை, அமெரிக்க நிறுவனங்கள். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் இந்தப் பட்டியலில் உள்ளது.

1. பெர்க்‌ஷையர் ஹாத்வே (Berkshire Hathway)

63 கம்பெனிகளை உள்ளடக்கிய குழுமமான இதன் விலை 2,16,640 டாலர் (இந்திய ரூபாயில் 1.44 கோடி). உலகின் முதல் விலை மதிப்புமிக்க பங்குக்குச் சொந்தமான இந்த நிறுவனத்துக்குச் சொந்தக்காரர் வாரன் பஃபெட். 11 வயதில் பங்கு வாங்கி முதலீடு செய்த இவர்தான் இன்று உலகிலேயே பங்குச் சந்தை முதலீட்டில் கொடிகட்டிப் பறக்கும் முதலீட்டாளர். ஆரம்பத்தில் இவர் பேப்பர் டெலிவரி செய்து வந்தார். உலகின் முன்னணி ஜெட் கம்பெனிக்கும் சொந்தக்காரர் இவர்.

2. சீபோர்டு கார்ப்பரேஷன் (seaboard corporation)


வேளாண்மை மற்றும் கடல் போக்குவரத்தில் உலகின் பல மூலைகளிலும் தனது தொழிலை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 3,479 டாலர். இந்திய ரூபாயில் 2.3 லட்சம்.

3. என்விஆர் இன்கார்ப்பரேட்டட் (NVR Incorporated)

இது ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டுக் கடன் வழங்கல் தொழிலைச் செய்துவரும் அமெரிக்க நிறுவனம். 1980-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு விலை தற்போது 1,620 டாலர். இந்திய ரூபாயில் 1.08 லட்சம்.

4. ப்ரைஸ்லைன் டாட்காம் (priceline.com)


சுற்றுலாத் துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம். விமான டிக்கெட்டுகள், தங்கு விடுதிகள் போன்றவற்றில் பயனாளர்கள் தங்களின் தேவை மற்றும் பொருளாதார நிலைக் கேற்ப தள்ளுபடிகள் மற்றும் பல்வேறு விருப்பங்களைத் தேர்வு செய்ய இந்த இணையதளம் உதவியாக இருக்கிறது. இதன் ஒரு பங்கின் விலை 1,479 டாலர். இந்திய ரூபாயில் 98 ஆயிரம்.

5. மார்கெல் கார்ப்பரேஷன் (Markel Corporation)

இன்ஷூரன்ஸ் நிறுவனமான மார்கெல் கார்ப்பரேஷன் 1930-ல் தொடங்கப்பட்டது. இதன் ஒரு பங்கின் விலை 918 டாலர். இந்திய ரூபாயில் 61 ஆயிரத்துக்கும் மேல்.

6. அமேசான் (Amazon)

இது ஒட்டுமொத்த உலகின் இ-காமர்ஸ் ஜாம்பவான். டிஜிட்டல் யுகத்தைச் சரியாகப் பயன்படுத்தி, உலகம் முழுவதும் தனது தொழிலை விரிவுபடுத்திய இதன் ஒரு பங்கின் விலை 839 டாலர். இந்திய ரூபாயில் 55 ஆயிரத்துக்கும் மேல்.

7. கூகுள் (Google)

உலகின் முன்னணி தேடுதல் பொறியான கூகுள், இணையம் சார்ந்த பல சேவைகளை வழங்கி வருகிறது. 1998-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் சேவைகளில் ஏதோ ஒன்றை உலகின் 92 சதவிகிதத்தினர் பயன்படுத்து கின்றனர். ஒரு பங்கின் விலை 800 டாலர். இந்திய ரூபாயில் 53 ஆயிரம்.

8. எம்ஆர்எஃப் (MRF)

உலகின் டாப் விலை மதிப்பு மிக்க பங்குகள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய நிறுவனம் எம்ஆர்எஃப். அதுவும் தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டது என்பது கூடுதல் மகிழ்ச்சி. உலகம் முழுவதும் எம்ஆர்எஃப் டயர்கள் விற்பனை ஆகின்றன. இதன் ஒரு பங்கின் விலை ரூ.50 ஆயிரத்துக்கும் மேல்.

 9. இன்ட்யூடிவ் சர்ஜிகல் இன்கார்ப்பரேட்டட் (Intuitive surgical Incorporated)

அமெரிக்க நிறுவனமான இது, மருத்துவத் துறையில் தானியங்கி அறுவை இயந்திரங்களையும், அவை சார்ந்த கருவிகளையும் உற்பத்தி செய்துவருகிறது. இந்த நிறுவனம் 1995-ல் தொடங்கப்பட்டது. ஒரு பங்கின் விலை 718 டாலர். இந்திய ரூபாயில் ரூ.47 ஆயிரம்.

10. பிக்லரி ஹோல்டிங்ஸ்! (Biglari Holdings)


அமெரிக்க நிறுவனமான இது பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. சொல்லப்போனால், 2010-ல்தான் இது தொடங்கப்பட்டது. சர்தர் பிக்லரி என்பவர் தொடங்கிய இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 439 டாலர். இந்திய ரூபாயில் 29 ஆயிரம்.

(குறிப்பு: இங்குக் குறிப்பிட்டுள்ள பங்குகளின் விலையில் சிறிய ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்