கம்பெனி ஸ்கேன்

ஹெச்.டி.எஃப்.சி! (NSE SYMBOL: HDFC)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

வீட்டு வசதிக்கான கடன் வழங்கும் நிறுவனம் ஹவுஸிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட். வீட்டு வசதிக் கடனுக்கான கடனை தரும் தனியார் நிறுவனங்கள் இல்லாத காலத்தில் ஒரு முன்னோடி நிறுவனமாக, 1977-ம் ஆண்டில் வீட்டு வசதிக் கடன்களை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம்.

ஆரம்ப நாள் முதல் சமீப காலம் வரை கிட்டத்தட்ட 5.4 மில்லியன் வீடுகளுக்கான கடன்களை வழங்கியுள்ளது இந்த நிறுவனம்.  கிட்டத்தட்ட 2.9 டிரில்லியன் ரூபாய் அளவுக்கான கடன் தொகையை வழங்கியுள்ள இந்த நிறுவனம், வங்கிகளைத் தவிர்த்து டெபாசிட் பெறும் நிறுவனங்களில் அகில இந்திய அளவில் மிகப் பெரிய நிறுவனமாக இன்று உருவெடுத்துள்ளது.

சமீப காலம் வரை கிட்டத்தட்ட 1.8 மில்லியன் டெபாசிட்தாரர்களைக் கொண்டு அவர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது இந்த நிறுவனம்.மேலும், வீட்டு வசதிக் கடன் தருவதில் ஒரு முன்மாதிரி நிறுவனமாக அறியப்பட்டுள்ளது இந்த நிறுவனம். ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் வீட்டு வசதிக் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ஆலோசனைகளைச் சொல்லி (கன்சல்டன்சி வசதி) வரும் நிலையில் இருக்கிறது இந்த நிறுவனம் என்பது ஒரு தனிச்சிறப்பாகும்.

வீட்டு வசதிக்கான கடன் அளித்தல் மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து டெபாசிட்களைப் பெறுதல் என்பது தொழில் ரீதியாக நிறைய கிளைகளையும் சிறந்த நெட்வொர்க்கையும் கொண்டிருக்கவேண்டிய துறையாகும். ஹெச்டிஎஃப்சி நிறுவனம் இதற்கு ஏற்றாற்போல் 401 இடங்களில் கிளைகளைக் கொண்டு (116 அலுவலகங்கள் ஹெச்டிஎஃப்சியின் துணை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி சேல்ஸ் எனும் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருபவை) அகில இந்தியரீதியாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. 

வேகமான வளர்ச்சியைக் காணும் பொருளாதாரத்தில், மக்களின் கையில் பணப் புழக்கம், வருமான அதிகரிப்பின் மூலம் உயரவே செய்கிறது. சம்பாதித்த பணத்தைக் கொண்டு மக்கள் வீடுகளை கட்ட/வாங்க முயற்சிப்பது   எதிர்பார்க்கக்கூடிய நிகழ்வே. மேலும், இந்த விதமான வருமானத்தின் காரணமாக அதிகரிக்கும் பணப்புழக்கத்தின்போது, பெரும்பாலானோர் வருமான வரியைக் குறைப்பதற்காகவே வீட்டுக் கடன்களைப் பெற முயற்சிக்கின்றனர். வீட்டுக் கடன்களுக்கான வருமான வரி விலக்கு, இந்த விதமான கடன்களுக்கான ஊக்குவிப்பை வழங்குகிறது எனலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்