தித்திக்கும் 5 தீபாவளி பங்குகள்!

ஜெ.சரவணன்

தீபாவளி...

நம் அனைவருக்கும் சந்தோஷம் அளிக்கும் முக்கிய பண்டிகை. தொழிலுக்கும் முதலீட்டுக்கும் முக்கியமான நாள். அதனால்தான் அன்றைக்கு புதுக் கணக்கு தொடங்குவார்கள் பலர். அன்றைக்கு பங்கு வாங்கினால் அதிர்ஷ்டம் தரும் என்பதால்தான் தீபாவளி அன்று முகூர்த் வர்த்தகம் (முகூர்த் டிரேடிங்) நடக்கிறது.

தீபாவளி நெருங்கும் இந்த சமயத்தில் வாங்கி, நல்ல லாபம் பார்க்க வாய்ப்புள்ள ஐந்து பங்குகளை சென்னையைச் சேர்ந்த சோழா செக்யூரிட்டீஸ் (cholawealthdirect.com) நிறுவனத்திடம் கேட்டோம். அந்த நிறுவனத்தின் அனலிஸ்டுகளான எம்.சத்தியநாராயணன், கே.ஸ்ரீதேவி, ஆசிஷ், ஹேமந்த் மற்றும் பிரவீன், பல நூறு பங்குகளை அலசி ஆராய்ந்து, ஐந்து பங்குகளைத் தேர்வு செய்து தந்தனர். 

‘‘பரிந்துரை செய்யப்பட்ட பங்குகளைப் பார்க்கும்முன், தற்போது நிலவிவரும் பங்குச் சந்தையின் போக்குப் பற்றி முதலில் பார்த்து விடுவோம்’’ என்றபடி ஆரம்பித்தனர் அவர்கள்.
 
‘‘நடப்பு 2016-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தைகள் சற்று இறக்கத்தில் இருந்தாலும், அதன்பிறகு மத்திய அரசு எடுத்த சில முக்கிய கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங் களால் சந்தைகள் நல்ல ஏற்றத்தைக் காண ஆரம்பித்தன. சரக்கு மற்றும் சேவை வரி, திவால் சட்ட மசோதா, ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரை அமல் ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளன.

இதன் காரணமாக, நிஃப்டி 9 சதவிகிதமும், சென்செக்ஸ் 6 சதவிகிதமும் உயர்ந்திருக்கின்றன. முக்கியமாக, நிஃப்டி மிட்கேப் 25 சதவிகிதமும், நிஃப்டி ஸ்மால் கேப் 19 சதவிகிதமும் உயர்ந்திருக்கின்றன.

பங்கு விலை உயர்வில் துறை வாரியாகப் பார்த்தால், மெட்டல், ஆயில் & காஸ் ஆகியவை முறையே 43 சதவிகிதமும், 37 சதவிகிதமும் ஏற்றம் கண்டுள்ளன. ரியல் எஸ்டேட் 15 சதவிகிதமும், பொதுத்துறை நிறுவனங்கள் 14 சதவிகிதமும், வங்கிகள் 13 சதவிகிதமும் உயர்ந்துள்ளன. ஆனால், ஐடி 9 சதவிகிதமும், ஹெல்த்கேர் 3 சதவிகிதமும் இறக்கத்தைக் கண்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்