பிஎன்பி ஹவுஸிங் ஃபைனான்ஸ் ஐபிஓ... முதலீட்டுக்கு ஏற்றதா?

மு.சா.கெளதமன்

ஞ்சாப் நேஷனல் பேங்கின் துணை நிறுவனம் பிஎன்பி ஹவுஸிங் ஃபைனான்ஸ். இது இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் வாராக் கடன்களும் டாப் 5 நிறுவனங்களில் மிகக் குறைவாகவே இருக்கின்றன.

பிஎன்பி ஹவுஸிங் ஃபைனான்ஸ், வரும் அக்டோபர் 25 முதல் 27 வரை புதிதாக பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) களமிறங்குகிறது. இந்த நிறுவன, ஐபிஓ மூலம் 3,000 கோடி ரூபாய் திரட்ட இருக்கிறது. 750 - 775 ரூபாயாக பங்கு விலைப் பட்டை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
 
ஒரு லாட்டுக்கு 19 பங்குகள். முதலீடு செய்ய விரும்புபவர்கள் லாட் கணக்கில்தான் வாங்க வேண்டும். இந்த ஐபிஓ-வில் முதலீடு செய்யலாமா என்று ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ரிசர்ச் ஹெட் ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம்.

“பிஎன்பி ஹவுஸிங் ஃபைனான்ஸ், கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் சுமாராக 60%  வளர்ந்திருக்கிறது. அதோடு, இந்த நிறுவனத்தின் கடனில் 70% வீட்டுக் கடன்களாகவும், மீதி மற்ற கடன்களாகவும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வாராக் கடன்கள் 0.22% இருப்பது பெரிய சாதகம். இந்த நிறுவனத்தின் வாராக் கடன்கள் வரும் ஆண்டுகளில் அதிகரித்தால்கூட ஹவுஸிங் ஃபைனான்ஸ் துறையின் சராசரி அளவுகளுக்கு மட்டுமே உயரும் என்று எதிர்பார்க்கலாம்.

மிக முக்கியமாக, இந்த நிறுவனத்தின் வீட்டுக் கடன்கள் டயர் இரண்டு நகரங்களில் இருந்து அதிகம் வருவதால், கடன் தொகை குறைவாகவே இருக்கிறது. எனவே, வாராக் கடனுக்கான ரிஸ்க் குறைகிறது.

இந்த நிறுவனம், கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் கொடுத்திருக்கும் மொத்த கடனில் சுமாராக 11 - 13 சதவிகிதக் கடன் தொகை மட்டுமே ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குத் தரப்பட்டு இருக்கிறது. பெருமளவிலான கடன்கள் சிறு கடன்களாகவே தரப்பட்டு இருக்கின்றன. இந்த நிறுவனம் தந்திருக்கும் மற்ற கடன்களில் சொத்துக்கு எதிராக தரப்பட்ட கடன்கள் 60 சதவிகிதத்துக்கு மேல் இருக்கின்றன.  அதோடு இந்த நிறுவனத்தின் புத்தக மதிப்புக்கும், விலைக்குமான விகிதாச்சாரம் (Price to Book value) 2.35 - 2.50 ஆக இருக்கிறது. இது ஒரு நல்ல மதிப்பீடுதான். எனவே, இந்த ஐபிஓ-வில் முதலீடு செய்யலாம்” என்று முடித்தார் பிரபாகர்.

வாசகர்கள் யோசித்து முடிவெடுக்கலாமே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்