டிரேடர்களே உஷார் - 21

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சரியான பயிற்சியே சக்சஸ் தரும்!தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

ல்லிகாவுக்குத் திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகின்றன.  கணவன் விவேகானந்தனுக்கு, தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.18,000 சம்பளத்தில் அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில் வேலை.

மல்லிகாவும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர். கணவனுடைய வருமானத்துக்கு உட்பட்டு, கச்சிதமாகக்  குடும்பத்தை  நடத்திக்கொண்டு இருந்தார்.  

மல்லிகா பி.காம். பட்டதாரி.      அவர் படித்த படிப்பிலேயே பங்குச் சந்தையை பற்றிய அறிமுகப் பிரிவும் இருந்தது. கல்லூரியில் படிக்கும்போதே பங்குச் சந்தையில் ஒரு  ஈர்ப்பு.   ஆனால், அப்போதெல்லாம், அதை ஒரு படிப்பாகவே படித்தார். அதை நடைமுறை வாழ்கையில் எப்படிச் செயல் படுத்துவது என்று யாரும் சொல்லித் தரவில்லை. அது அவர் மனதில் ஒரு குறையாகவே இருந்தது.  

அன்று காலை வழக்கம் போல் எழுந்து பரபரவென்று வேலையில் ஈடுபட்டாள்.  காலையில் டிபன் தயாரித்து, பின்பு கணவன் விவேகானந்தன்  ஆபிஸுக்கு எடுத்துச் செல்ல மதிய உணவைத் தயார் செய்து அவரை வழி அனுப்பி வைத்தார்.   பின்பு அக்கடாவென்று சோபாவில் சாய்ந்து, டிவி ரிமோட்டை எடுத்து, டிவியை ஆன் செய்தார். செய்திகள் ஓடிக்கொண்டு இருந்தன. 

‘‘ஜெர்மன் அதிபர் இந்தியா வருகை...  மத்திய அரசு அந்நிய நேரடி முதலீட்டை முக்கிய துறைகளில் அதிகரிக்க அனுமதி அளித்துள்ளது.

இந்தியப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் ஏறியது.  இதனால் முதலீட்டாளர் களின் பங்கு பதிப்பு ரூ.15,000 கோடி உயர்ந்துள்ளது.

இத்துடன் செய்திகள் முடிவடைந்தன.’’  

மல்லிகா ரிமோட்டை எடுத்து டி.வியை நிறுத்தினார். அவருக்குப் பங்குச் சந்தை பற்றிய ஆர்வம் மீண்டும் துளிர்த்தது. நாமும் பங்குச் சந்தையில் ஈடுபட்டால்தான் என்ன? அன்று முழுவதும், மல்லிகா பல்வேறு வீட்டு வேலைகள் செய்துகொண்டு இருந்தாலும்கூட, அவரது அடி மனதில் பங்குச் சந்தை பற்றிய எண்ணம்தான் ஓடிக்கொண்டே இருந்தது.

மாலையில் விவேகானந்தன், ஆபிஸில் இருந்து திரும்பி வந்தார்.  மல்லிகா தந்த காபியை ரசித்துக் குடித்துக் கொண்டிருக்க,  ‘‘ஏங்க... ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்க இல்ல’’ எனப் பீடிகை போட்டபடி, பேச ஆரம்பித்தார்.

‘‘எனக்கு ரொம்ப நாளா இந்த ஷேர் மார்க்கெட்ல ஈடுபட ஆசை.  இன்னிக்கு டிவியில ஷேர் மார்க்கெட் ஏறுச்சுன்னு செய்தியும் வந்தது. அதனால,  நானும் ஷேர் மார்க்கெட்ல  இறங்குட்டுமா?’’ - கணவர் என்ன சொல்லிவிடுவாரோ என்கிற சந்தேகத்துடன் கேட்டார்.

மல்லிகா கேட்ட விஷயத்தை பற்றி விவேகானந்தன் கொஞ்சம் யோசிக்கவே செய்தார். என்றாலும் மல்லிகாவை பற்றி அவருக்கு நன்கு தெரியும். எந்த விஷயத்தையும் நன்கு யோசித்து செய்யக்கூடியவர் என்பதால், ஓகே சொன்னார்.

ஆனால், ஒரு எச்சரிக்கைக்காக ‘‘நல்லாக்   கத்துக்கிட்டு பண்ணு மல்லிகா’’ என்றார்.

மல்லிகாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கணவர் இவ்வளவு சீக்கிரம்  சரி என்று  சொல்லுவார் என அவர் எதிர்பார்க்கவில்லை.  அடுத்தடுத்து வீட்டு வேலையில் மூழ்கிப் போனார்.

அடுத்த நாள், கணவர் ஆபிஸுக்குப் போனபின், பேப்பர்களை எல்லாம் புரட்ட ஆரம்பித்தார்.  எங்காவது, பங்குச் சந்தைப் பற்றிய பயிற்சி வகுப்புகள் இருக்கிறதா என்று தேடினார். பத்திரிகை ஒன்றில், பயிற்சி கொடுப்பதாக விளம்பரம் இருந்தது.  அதை கட் பண்ணி தனியாக எடுத்து வைத்துக்கொண்டார்.  மாலையில் கணவன் வந்ததும் காட்டினார்.  விவேகானந்தன் அந்த விளம்பரத்தைப் படித்தார்.

‘‘பங்குச் சந்தையில் எளிதாக லாபம் பார்க்க நாங்கள் பயிற்சி தருகிறோம். ‘‘எங்கள் சாஃப்ட்வேர்  மூலமாக நீங்கள் தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்’’ என்று அந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டு இருந்தது.

மல்லிகா, கணவரின்  முகத்தை ஆர்வமாகப் பார்த்தார். 

‘‘ஏங்க இந்தப் பயிற்சி வகுப்புல போய் சேரட்டுமா?’’

‘‘அவசரப்படாதே மல்லிகா.  என் நண்பர் ஒருத்தர், இந்த மாதிரிதான் ஏதோ டிரெய்னிங் போனதாகச் சொன்னார். அவர்கிட்ட விசாரிக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த நண்பருக்கு போன் செய்தார்.

‘‘ஹலோ... முருகானந்தமா?  நல்லாயிருக்கியா?’’

‘‘நல்லா இருக்கேன் விவேக். சொல்லு என்ன வேணும்?’’ என்று உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

‘‘முருகா, என் மனைவி இந்த ஷேர் மார்க்கெட் ட்ரைனிங் எடுக்க ஆசைபடுறா.  பேப்பர்ல ஆல்ஃபா கம்பெனி  விளம்பரம் வந்திருக்கு. அந்த கம்பெனி நடத்துற பயிற்சி வகுப்புல சேரலாமா?’’ என்று கேட்டதுதான் தாமதம் ; அலறி அடித்துக் கொண்டு பதில் சொன்னார் முருகானந்தம்.
‘‘வேணாம் விவேக். அவங்க டிரெய்னிங்கல, அவங்க சாஃப்ட்வேர் பத்திதான் சொல்லித் தருவாங்க. 

அந்த சாஃப்ட்வேரை நீ வாங்கல்லைன்னு வச்சுக்க, இந்தப் பயிற்சி வகுப்பால எந்தப் பிரயோஜனமும் கிடைக்காது’’ என்றார்.   
 
‘‘அப்ப அந்த கம்பெனி நடத்துற டிரெய்னிங்குக்கு  போக வேணாமா?’’ என்று மீண்டும் கேட்டார் விவேகானந்தன்.

‘‘கட்டாயம் வேணாம்’’ என்றார் முருகானந்தம் உறுதியாக.

‘‘தாங்க்ஸ் முருகா’’ என்று சொல்லிவிட்டு, போனை வைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்