உழைத்துச் சம்பாதித்ததை ஊருக்குக் கொடுப்போம்!

ஹலோ வாசகர்களே..!

எல் அண்ட் டி நிறுவனத்தை கடந்த நாற்பது ஆண்டுகளாகத் திறம்பட நடத்தி வருபவர் ஏ.எம்.நாயக். மிகப் பெரிய இன்ஜினீயரிங் நிறுவனமான எல் அண்ட் டி-யை நிதித் துறையிலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் கால்பதிக்க வைத்து பன்முகம் கொண்ட நிறுவனமாக மாற்றி, ஜொலிக்க வைத்தவர் இவர்தான். இவர் தனது வருமானத்தில் 75 சதவிகிதப் பணத்தை நற்காரியங்களுக்குச் செலவிடப் போவதாக செய்தி வெளியாகி இருப்பது கவனிக்கத்தக்கது.

பிசினஸ் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி, பெரும் பணம் சம்பாதித்ததன் விளைவாக உயர்ந்த நிலையை அடைந்தவர்கள், தாங்கள் சம்பாதித்த பணத்தை தங்களை உருவாக்கி, வளர்த்தெடுத்த சமூகத்துக்கே திரும்பத் தந்துவிடுகிற வழக்கம் நம் நாட்டிலும் வேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்காவில் பில் கேட்ஸும், வாரன் பஃபெட்டும் தொடங்கிய இந்த இயக்கத்தை (The Giving Pledge) நம் நாட்டில் அஸிம் பிரேம்ஜியும் கிரண் மஜும்தார் ஷாவும் தொடர்ந்து வருகின்றனர்.

சம்பாதித்த பணத்தை தங்கள் சமூகத்துக்கே திரும்பத் தருவது நமக்குப் புதிதல்ல. கோயில்களுக்கு நம்மவர்கள் அளித்த நன்கொடையைப் போல உலகில் வேறு எவரும் அளித்திருக்க முடியாது.  கோயில் களுக்கு அள்ளித் தருகிற அதே நேரத்தில், தொண்டு மனப்பான்மையுடன் நலிவுற்ற மக்களுக்காக பாடுபடும் கல்வி நிறுவனங் களுக்கும் மருத்துவமனைகளுக்கும் நம் செல்வத்தை அள்ளித் தருகிற வழக்கத்தை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

சம்பாதித்ததில் தான தர்மங்கள் செய்தது போக, மீதமுள்ளதை தனது வாரிசுகளுக்கு விட்டுச் சென்றது நேற்று வரை சரியான காரியம்தான். அதற்காக இனியும் அந்த நடைமுறையை நாம் விடாமல் தொடர வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய இளைஞர்களும் தங்கள்  பெற்றோர்களிடம் இருந்து சொத்து சுகங்களைவிட, தங்கள் திறமைகளை வளர்த்தெடுக்கும் நல்ல கல்வியையும் நல்வழிகாட்டுதலையுமே பெற விரும்புகின்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்