முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு... எந்த ஃபண்ட் ஏற்றது?

கேள்வி-பதில்

? என் வயது 35. மியூச்சுவல் ஃபண்டில் மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை முதலீடு செய்ய இருக்கிறேன். பின்வரும் ஃபண்டுகளில் முதலீட்டை எஸ்ஐபி முறையில் தொடங்கி இருக்கிறேன். ஐசிஐசிஐ புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி ரூ.5,000; மிரே அஸெட் எமர்ஜென்ஸி புளூசிப் ஃபண்டில் ரூ.5,000; ஃப்ராங்கிளின் இந்தியா பிரைமா ப்ளஸ் ஃபண்டில் ரூ.4,000 முதலீடு செய்து வருகிறேன். மேலும், சைல்டு பெனிஃபிட் ஃபண்டிலும், பென்ஷன் ஃபண்டு திட்டத்திலும்  முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளேன். நல்ல ஃபண்ட் திட்டங்களைச் சொல்லுங்களேன்.

சிவா, சென்னை

பாரதிதாசன், நிதி ஆலோசகர்

“குழந்தையின் உயர் கல்விக்கு ஹெச்டிஎஃப்சி சில்ட்ரன் கிஃப்ட் ஃபண்டிலும், பென்ஷனுக்காக ரிலையன்ஸ் ரிடையர்மென்ட் ஃபண்டிலும் முதலீடு செய்யலாம். ரிலையன்ஸ் ஃபண்டில் உங்களுக்கு 80சி பெனிஃபிட் மற்றும் செலுத்தும் எஸ்ஐபி தொகையைப் போல்  அதிகபட்சம் 120 மடங்கு ஆயுள் காப்பீடும் கிடைக்கும்.”

? என் வயது 30. நான் அடுத்த ஆறு வருடங்களுக்கு எஸ்ஐபி முறையில் முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் திட்டமிட்டு இருக்கிறேன். நீண்ட கால  முதலீட்டுக்கு பிர்லா சன் லைஃப் பேங்கிங் அண்ட்  ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஃபண்ட், பிர்லா சன் லைஃப் எம்என்சி ஃபண்ட், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் பிரைமா ப்ளஸ் ஃபண்ட் மற்றும் ஃப்ராங்க்ளின் ஹை குரோத் கம்பெனீஸ் ஃபண்ட் ஆகிய நான்கு திட்டங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். இவை சரியான ஃபண்டுகள்தானா?

விஜய் லிங்கம்

ச.இராமலிங்கம், நிதி ஆலோசகர்

“நீங்கள் முதல் முதலாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறீர்கள் என்பதால், செக்டார் ஃபண்டுகளில் முதலீடு (6 ஆண்டுகள்) செய்வதைக் காட்டிலும், பிர்லா சன் லைஃப் பேலன்ஸ்டு ஃபண்ட் அல்லது எல் அண்ட் டி இந்தியா புரூடென்ஸ் பண்டில் முதலீடு செய்வது நலம். இது மட்டுமின்றி, பிர்லா சன் லைஃப் எம்என்சி ஃபண்ட். ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் பிரைமா மற்றும் டிஎஸ்பி பிளாக்ராக் மைக்ரோ கேப் ஃபண்டினைத் தேர்ந்தெடுத்து நீண்ட காலத்தில் முதலீடு செய்யலாம்.’’

? அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்குத் தொடங்க என்ன நடைமுறை? புதிதாகக் கணக்குத் தொடங்க அறிமுகம் அவசியமா?

பாலாஜி

அனிதா பட், நிதி ஆலோசகர்

“அஞ்சல் அலுவலகத்தைப் பொறுத்தவரை, புதிய விதிகளின்படி சேமிப்புக் கணக்குத் தொடங்க, போட்டோ, முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று கட்டாயம் தேவை. அஞ்சல் அலுவலகத்தில் டெபாசிட் தொடங்க இவையெல்லாம் இப்போது கேட்கப்படுகிறது. தவிர, சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு அஞ்சல் அலுவலகத்தில் பரிந்துரைக் கையெழுத்தும் (Refferal Sign) கேட்கிறார்கள். சேமிப்புக் கணக்கில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் முதலீடு செய்வதாக இருந்தால், பான் கார்டு கட்டாயம் அவசியம். நாமினியை  நியமிக்கும்பட்சத்தில் அதற்கு யாராவது ஒருவரது சாட்சிக் கையெழுத்து கட்டாயம் தேவை.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்