அஸிம் பிரேம்ஜி @ 50

ஓவியம்: கோ.ராமமூர்த்திசித்தார்த்தன் சுந்தரம்

*அஸிம் பிரேம்ஜி - இந்தியத் தொழிலபதிபர்கள் இடையே ‘பிசினஸ் சக்ரவர்த்தி’யாக விளங்குபவர். அஸிம் பிரேம்ஜி, விப்ரோ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பேற்று கடந்த 17-ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த முடிசூடா மன்னரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...

*அஸிம், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல் படிப்பு படித்தவர். அவருடைய தந்தை திடீரென்று மரணம் அடைந்ததைத் தொடர்ந்து மேற்படிப்பைத் தொடராமல், உடனே இந்தியாவுக்குத் திரும்பினார். அஸிமின் மனைவி யாஷ்மின். மகன்கள் ரிஷாத், தாரிக். ரிஷாத், இப்போது விப்ரோ நிறுவனத்தின் சீஃப் ஸ்ட்ராட்டஜி ஆபிஸராக இருக்கிறார். தாரிக், அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷனில்     பணியாற்றுகிறார். 

*தந்தையின் திடீர் மறைவுக்குப் பின், தனது 21-வது வயதில் விப்ரோ குழுமத்தை ஏற்று நடத்த ஆரம்பித்தார் அஸிம். 1981-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறையில் நுழைய ஆரம்பித்து, 1983-ம் ஆண்டு கணினி சம்பந்தமான மென்பொருட்களைத் தயாரித்து, ஏற்றுமதி செய்வதற்காக `விப்ரோ சிஸ்டம்’ என்கிற நிறுவனத்தை ஆரம்பித்தார்.       1985-ம் ஆண்டு கணினி தயாரிப்பில் ஈடுபட்டது விப்ரோ நிறுவனம்.

*அஸிம் பிறந்த அதே 1945-ம் ஆண்டில், மஹாராஷ்ட்ராவில் உள்ள அமல் நகரில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்தான் `வெஸ்டர்ன் இண்டியா வெஜிடெபிள் புராடக்ட்ஸ் லிமிட்டெட் (Westeren India Vegetable Products Ltd)’. இந்த நிறுவனம் ஆரம்பித்த மறு ஆண்டே (1946) நிதித் தேவைக்காக ஐபிஓ வெளியிடப்பட்டது. 1977-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின பெயர் `விப்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட் என்று மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் சூரியகாந்தி எண்ணெயையும், வனஸ்பதியையும் அதன் துணைப் பொருளான துணி துவைக்கும் சோப்பையும் (787 என்கிற பெயரில்) தயாரித்து சந்தைப்படுத்தி வந்த இந்த நிறுவனம், 80-களில் பல துறைகளில் காலூன்ற ஆரம்பித்தது. 

*`அஸிம் பிரேம்ஜி பவுண்டேஷன்’ என்கிற லாப நோக்கற்ற அமைப்பு ஒன்றை ஆரம்பித்து ஆரம்பக் கல்விக்குத் தேவையான சேவைகளை கர்நாடகம், புதுச்சேரி, உத்தரகாண்ட், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் செய்து வருகிறார்.
இதற்காகவும் மற்றும் இந்த நிறுவனம் செய்துவரும் பல தொண்டுகளுக்காகவும், அஸிம் தன் பெயரில் இருக்கும் விப்ரோ நிறுவனப் பங்குகளின் ஒரு பகுதியை இந்த ட்ரஸ்ட்டுக்கு மாற்றினார். இதன் மதிப்பு ஏறக்குறைய இரண்டு பில்லியன் டாலர்கள் (சுமார் 13,000 கோடி ரூபாய்க்கு மேல்).

*விப்ரோ நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பல ஆயிரம் மடங்கு லாபத்தை அள்ளித் தந்திருக்கிறார் அஸிம் பிரேம்ஜி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்