நாணயம் லைப்ரரி: சொத்து சேர்க்கும் சூரனாக மாறுங்கள்!

புத்தகத்தின் பெயர் :     வெல்த் வாரியர் (Wealth Warrior - The Personal Prosperity Revolution)

ஆசிரியர் :     ஸ்டீவ் சாண்ட்லர் (Steve Chandler)

பதிப்பகம் :     மெளவ்ரீஸ் பஸ்ஸெட் (Maurice Bassett)

நான் பரம ஏழை; எனக்கு உடல் ஊனம்; நான் கல்லூரியில காலடி எடுத்து வைக்காதவன்... இப்படி பல குறைகள் நம் மனதுக்குள் உண்டு. நாமெல்லாம் வாழ்க்கையில் எப்படி உருப்படப் போகிறோம், எங்கே சொத்தையும் சுகத்தையும் சேர்க்கப் போகிறோம் என்று புலம்புகிறவர்கள் நம்மில் பலர். ஆனால், ‘வெல்த் வாரியர்’ (பொருள்வளம் சேர்க்கும் சூரன்) என்னும் புத்தகத்தை எழுதிய ஆசிரியரின் வாழ்க்கைக் கதையைக் கேட்டால், நம் குறை எல்லாம் எம்மாத்திரம் என்று நினைக்கத் தொடங்கிவிடுவோம்.

எனக்குப் பிறவியிலேயே ஒரு பிரச்னை. எல்லா மனிதர் களுக்கும் சாதாரணமாக இருக்கிற மரபணு ஒன்று எனக்கு இல்லை. இந்த மரபணுதான்  ஒரு வேலையைச் சிரத்தையுடன் கஷ்டப்பட்டு செய்து முடிக்க உதவுவது. அந்த மரபணுக் குறைபாடு எனக்கு இருக்கிறது. என் குடிகாரத் தந்தையையும், நோய்வாய்ப்பட்ட மனைவியை யும்கூட என்னால் சமாளித்து விட முடியும். ஆனால், இந்த மரபணுப் பிரச்னையை வைத்துக்கொண்டு எப்படி ஜெயிப்பது? 

மேல்நிலைப்பள்ளியில் இருந்து வெளியே வந்தபோது மிகுந்த எரிச்சலுடனேயே நான் இருந்தேன். மதிப்பெண்கள் குறைவாக இருந்ததால், சிறந்த கல்லூரிகள் எனக்குக் கதவை அடைத்தன.  என்னை வரவேற்ற கல்லூரி ஒரு பார்ட்டி கலாசாரம் உள்ள கல்லூரி. 

முதல் பருவத்துக்கான பரீட்சை வந்தது. நான் ஒரு பரீட்சையையும் எழுதவில்லை. அடுத்த வருடம் பரீட்சையில் தேர்வடையாவிட்டால் கல்லூரியில் இருந்து அனுப்பி விடுவோம் என்று வீட்டுக்கு தபால் போனது. ‘அடுத்த ஆண்டும் ஃபெயில் ஆனால் வேலைக்குப் போக வேண்டும்’ என  பெற்றோர்களிடம் வசமாக திட்டு வாங்கினேன்.   

படிப்பு முடியும் முன்பே நான் முழுமையான மதுப் பழக்கத்துக்கு அடிமையானேன்.  வாழ்க்கையில் என்னைச் சுற்றி இருக்கும் எல்லோரும் முன்னேற் றம் கண்டனர்,  என்னைத் தவிர்த்து. ஏனென்றால்,  முன் னேற்றத்துக்கான மந்திரம் என்ன என்று எனக்குத்  தெரிய வில்லை.      12  வருடங்களுக்குப் பின்னால் நான் எப்படியோ ஒரு பட்டதாரி  ஆனேன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்