தோல்வி என்னும் நண்பன்!

வியாபார சிறுகதைபார்த்தசாரதி ரெங்கராஜ்

ஸ்க் நறுமணம் கசிந்துக் கொண்டிருந்த அந்த பெரிய அறையில் என்னோடு சேர்த்து 18 பேர் அமர்ந்திருந்தோம். மிக நேர்த்தியாக, நவீன உபகரணங்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் இணைப்புடன் தயார் செய்யப்பட்டுள்ள அறையில், நாங்கள் அமர்ந்து ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது இனி பரிமாறப்பட இருக்கும் உயர்தர குக்கீஸ் மற்றும் பிஸ்கட்டுகளுக்காக மட்டுமல்ல, புதிதாகச் சேர்த்திருக்கும் சேல்ஸ் டிரைனர் (விற்பனைப் பயிற்சியாளர்) இன்று முழுவதும் உரையாற்ற வருகிறார். ஒரு வகையில் இது நல்ல விஷயம், இன்று எங்கள் முசுடு மேனேஜரின் கடியிலிருந்து விடுதலை!

எங்களது நிறுவனம், ஒரு பன்னாட்டு கார் நிறுவனத்தின் விநியோகஸ்தர். ஒரு மாதத்துக்கு 500 கார்கள் வரை விற்கும் அளவுக்கு பெரிய நிறுவனம். இதுபோன்று இன்னும் சில பல தொழில்கள் உண்டு, எனது நிறுவனத்தின் கீழ். வருட வருவாய் ஆயிரம் கோடியைத் தாண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்