கம்பெனி ஸ்கேன்: டாடா பவர்

(NSE SYMBOL: TATAPOWER) டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் 1915-ல் ஆரம்பிக்கப்பட்ட  டாடா குழும நிறுவனமான டாடா பவர் கம்பெனி லிமிடெட்.

ஆரம்ப காலத்தில் மஹாராஷ்ட்டிராவில் ஹைட்ரோ எலெக்ட்ரிக் புராஜெக்ட்டை  நிறுவியது இந்த நிறுவனம். இன்றைக்கு இந்தியாவில் இருந்து செயல்படும் மின் உற்பத்தி நிறுவனங்களில் மிகப் பெரியதாகவும், உலக அளவில் பல்வேறு நாடுகளில் வேகமான விரிவாக்கத்தை செய்துவரும் நிறுவனமாகவும் இது திகழ்கிறது.

நிறுவனம் எப்படி?

டாடா பவர் நிறுவனம் தனது துணை நிறுவனங்களுடன் சேர்ந்து கிட்டத்தட்ட 9,532 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறனை தற்சமயம் கொண்டு உள்ளது. தெர்மல், ஹைட்ரோ, சோலார் மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி என அனைத்துவித உற்பத்தி முறை களிலும் மின் உற்பத்தி செய்து வருகிறது இந்த நிறுவனம். மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருட்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகளையும், பெறப்பட்ட எரிபொருட்களை உற்பத்தி செய்யும் இடங்களுக்குக் கொண்டு செல்லத் தேவையான லாஜிஸ்டிக்ஸ் வசதிகளையும் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்