ஜூன் காலாண்டு முடிவுகள்... கற்றுத் தரும் பாடங்கள்!

எஸ்.லெட்சுமணராமன், பங்குச் சந்தை நிபுணர்,

டப்பு நிதி ஆண்டின் (2016-17) முதல் காலாண்டுக்கான (ஏப்ரல், மே, ஜூன்) நிதிநிலை முடிவுகளை ஏறத்தாழ 3,000-த்துக்கும் அதிகமான நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்றன. இந்த முடிவுகள் என்ன வகையான போக்கினைக் (Trend) காட்டுகின்றன என்பதை முதலில் பார்த்துவிடுவோம்.
 
லார்ஜ் கேப் நிறுவனங்களைவிட மிட் கேப் நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் சிறப்பாக வந்துள்ளன.

ஏற்றுமதி சார்ந்த அல்லது சர்வதேச அளவில் செயல்படக்கூடிய (மென்பொருள், இன்ஜினீயரிங், ஆட்டோ உதிரிப்பாகத் தயாரிப்பாளர்கள்) நிறுவனங்களைவிட உள்நாட்டு நுகர்வு சார்ந்த நிறுவனங்களின் நிதிச் செயல்பாடு மேம்பட்டுள்ளன.

கடந்த நிதி ஆண்டின் (2015-16) நான்காவது காலாண்டுடன் ஒப்பிடும்போது, நிறுவனங்கள் தரும் வட்டியின் அளவு தோராயமாக 2.75% குறைந்திருக்கிறது. அதாவது, நிறுவனங்களின் வட்டிச் சுமை, டிசம்பர் காலாண்டைவிட முடிந்த ஜூன் காலாண்டில் 2.7% குறைந்துள்ளது.

இனி ஜூன் காலாண்டு நிதிநிலை அறிக்கைப்படி, துறைகளின் செயல்பாடுகளைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

மிக நன்றாக செயல்பட்ட துறைகள்!

வாகன உதிரிப் பாகங்கள், சிமென்ட், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், பெயின்ட் மற்றும் காகித தயாரிப்பு நிறுவனங்கள், சில தனியார் வங்கிகள்.

நன்றாகச் செயல்பட்ட துறைகள்!

வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், கெமிக்கல்ஸ், உணவு மற்றும் உணவுப் பதப்படுத்துதல், பிளாஸ்டிக்ஸ், எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனை, வீட்டு உபயோகப் பொருட்கள்.

ஏமாற்றம் அளித்த துறைகள்!

மென்பொருள், பொதுத் துறை வங்கிகள், சில பார்மா நிறுவனங்கள்.

நன்று மற்றும் மிக நன்று!

இதில் வகைப்படுத்தப்பட்டுள்ள துறைகளின் பெரும்பான்மையான பங்குகளின் விலைகள், லாப வளர்ச்சியை எதிர்பார்த்து, கணிசமான ஏற்றம் கண்டுள்ளன. எனவே, இந்தத் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளில் விலையில் இறக்கம் வரும்போது முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

வங்கித் துறை!

பெரும்பான்மையான பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் குறைந்துள்ளன. பேங்க் ஆஃப் இந்தியா, அலகாபாத் பேங்க் மற்றும் சென்ட்ரல் பேங்க்  ஆஃப் இந்தியா ஆகியவை நிகர லாபத்தில் இழப்பைச் சந்தித்துள்ளன. 

விதிவிலக்காக இந்தியன் வங்கி மற்றும் விஜயா வங்கி போன்றவற்றின் நிகர லாபம் அதிகரித்துள்ளன.

இருந்தாலும், பொதுத் துறை வங்கி பங்குகளின் விலைகள் சமீபகாலமாக கணிசமான ஏற்றம் கண்டுள்ளன.

காரணம், தற்போது வாராக் கடன்களின் அளவு மொத்தக் கடன் தொகையில் 7%  அளவுக்கு குறைந்திருப்பதாக  அனலிஸ்ட்டுகள் தெரிவிக்கிறார்கள்.

நடப்பு நிதியாண்டில் புதிய வாராக் கடன்களின் அளவு 1.5% மேல் செல்லாது என்று ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ போன்ற தர நிர்ணய நிறுவனங்களின் ஆய்வறிக்கை கள் கூறுகின்றன. இவை இந்திய வங்கித் துறைக்குச் சாதகமான விஷயங்களாக மாறி இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்