பங்கு தரகுக் கட்டணங்கள்: கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

மு.சா.கெளதமன்

ங்குச் சந்தையில் தினமும் பங்கை வாங்கி விற்கும்போதும், நீண்ட கால முதலீட்டு நோக்கில் பங்கை வாங்கி, விற்கும்போதும் என்னென்ன கட்டணங்கள் கட்ட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதனால்  லாபம் அல்லது நஷ்டத்தை சரியாகக் கணக்கிட முடிவதில்லை. பங்கை வாங்கி, விற்கும்போது கட்ட வேண்டிய தரகுக் கட்டணங்கள் என்னென்ன என்று கார்வி ஸ்டாக் புரோக்கிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். விரிவாக விளக்கினார்.

‘‘இந்தியாவில் பங்கு முதலீடு குறித்த விழிப்பு உணர்வு தற்போதுதான் அதிகரித்து வருகிறது. அதனால், முதலீட்டாளர்களை தக்கவைத்துக் கொள்ள  தரகு நிறுவனங்கள் தரகு மற்றும் கையாளுதல் கட்டணங்களில் சலுகைகளை அளிக்கின்றன.

சில தரகு நிறுவனங்கள், பங்குச் சந்தையில் டெலிவரி அடிப்படையில் பங்கு வாங்குபவர் களுக்கு தரகுக் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. சில தரகு நிறுவனங்களில் ஆண்டு அல்லது மாதத்துக்கு குறிப்பிட்ட தொகையை தரகுக் கட்டணமாகச் செலுத்திவிட்டால் போதும், அதன் பிறகு  எத்தனை முறை டிரேட் செய்தாலும்  கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. எனவே, நீங்கள் டெலிவரி எடுக்கப் போகிறீர்களா,  இன்ட்ரா டே டிரேடரா என்பதைப் பொறுத்து,  தரகுக் கட்டணம் கூடும் அல்லது குறையும்.  

சில பெரிய நிறுவனங்கள் கையாளுதல் கட்டணம் வாங்குவதில்லை. அவர்கள் முதலீட்டாளர்களுக்கு ஸ்டேட்மென்ட்டுகள், கான்ட்ராக்ட் நோட்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவிடுவதே காரணம்.  

உதாரணமாக ஒருவர், அசோக் லேலாண்ட் பங்கை 100 ரூபாய்  என்கிற விலையில்  100 பங்கு கள் வாங்குகிறார் என்றால், மொத்தம் 10,000 ரூபாய் செலவிட்டிருப்பார். அந்த பங்குகளை 110 ரூபாய்க்கு அதிகரித்ததும் விற்கிறார். வாங்கும் போது 10,000 ரூபாய், பங்கை விற்கும் போது 11,000 ரூபாய், ஆக மொத்தத்தில் 21,000 ரூபாய்க்கு டேர்ன் ஓவர் நடந்திருக்கிறது. 

இங்கு தரகுக் கட்டணமாக இன்ட்ரா டேக்கு 0.05%, டெலிவரிக்கு 0.5% எடுத்துக் கொள்கிறோம். அதேபோல் தரகு நிறுவனம் குறைந்தபட்ச மாக 25 ரூபாய் வசூலிக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்