ஷேர்லக்: இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கு கிடுக்கிப்பிடி!

பங்கு முதலீடு...ஓவியம்: அரஸ்

நம் அலுவலகத்துக்கு வழக்கம்போல வருகிற மாதிரி வெள்ளிக்கிழமை அன்று வந்தார் ஷேர்லக். பகல் வேளையில் அடித்த வெயில் காரணமாக மதியத்துக்குப் பிறகு மழை பெய்ததில் சென்னை நகரம் கொஞ்சம் குளிர்ச்சி அடைந்திருந்தது. மழைக் கோட்டுடன் வந்திருந்த அவரை வரவேற்று கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

‘‘நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கு இந்திய இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) கிடுக்குப்பிடி போட்டு இருக்கிறதே?’’ என்று முதல் செய்தியை எடுத்துக் கொடுத்தோம்.

‘‘எல்லாம் பாலிசிதாரர்களின் நலன் கருதிதான்  ஐஆர்டிஏஐ  இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இனி பங்குகளை முதலீடு செய்ய  நிறுவனங்களை தேர்வு செய்யும்போது, அவை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக குறைந்தபட்சம் 10% டிவிடெண்டை முதலீட்டாளர்களுக்கு அளித்திருக்க வேண்டும்.  இதற்குமுன் கடந்த 9 ஆண்டுகளில் 8 ஆண்டுகள் குறைந்தது 4% டிவிடெண்ட் தந்திருக்க வேண்டும் என இருந்தது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்