கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சோ.கார்த்திகேயன்

ந்த வாரம் தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற கமாடிட்டிகளின் விலைப்போக்கு குறித்து அலைஸ் புளூ நிறுவனத்தின் தலைவர் கே.ராஜேஷ் கூறுகிறார்.

தங்கம்!


அமெரிக்காவில், மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பினால் எம்சிஎக்ஸ் சந்தையில், தங்கம் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் 31,093 மற்றும் 30,670 இடையே கடந்த வாரம் வர்த்தகம் ஆனது.

கடந்த வாரம் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறித்த டேட்டா பாசிட்டிவாக வெளியானதால், செப்டம்பரில் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்  எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.

இந்த நிலையில்,  அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறித்த டேட்டா அந்த நாட்டு மத்திய வங்கிக்குச் சாதகமாக இருக்கும்பட்சத்தில், செப்டம்பர் அல்லது டிசம்பரில் வட்டி விகிதம் உயர்த்தப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்வதைவிட, கடன் சந்தைகளில் மேற் கொள்ளப்படும் முதலீடு அதிகளவில் இருக்கும். இதனால் தங்கம் விலை மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெக்னிக்கல் சார்ட்படி, தங்கம் ரூ.30,500-ல் நல்ல சப்போர்ட் நிலையில் உள்ளது. இது உடைபடும்பட்சத்தில் தங்கம் விலை மேலும் சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி!

எம்சிஎக்ஸ் சந்தையில் ஒரு கிலோ வெள்ளி (செப்டம்பர் மாத கான்ட்ராக்ட்) ரூ.44,479 மற்றும் 43,559-க்கு இடையே கடந்த வாரம் நெகட்டிவ்வாக வர்த்தகம் ஆனது. அமெரிக்காவில் மத்திய வங்கி, வட்டி விகிதத்தை வரும் மாதங்களில் உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பினால் தங்கத்தைப்போல, வெள்ளியின் விலையும் சரிவடைந்து வருகிறது.  வரும் வாரங்களில் இதன் விலை மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. டெக்னிக்கல் சார்ட் படி, வெள்ளி ரூ.43,660-ஐ உடைக்கும் பட்சத்தில் ரூ.42,850 வரை இறங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்