வளர்ச்சி வேகம் குறைய அனுமதிக்கக் கூடாது!

ஹலோ வாசகர்களே..!

ம் நாட்டின் வளர்ச்சியை எடுத்துச் சொல்லும் ஜி.டி.பி. புள்ளி விவரங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்ற ஏப்ரல் - ஜூன் காலாண்டில் நமது ஜி.டி.பி. வளர்ச்சி 7.1% என்கிற அளவில் இருந்திருக்கிறது. கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் நமது ஜி.டிபி. 7.9% வளர்ச்சி கண்டது. அதுமட்டுமல்ல, கடந்த ஆண்டின் இதே காலாண்டில் நமது ஜி.டி.பி. 7.50% வளர்ச்சி கண்டது. 

இந்த இறக்கத்துக்கு மத்திய அரசாங்கமே பொறுப்பு. மோடி அரசாங்கம் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் கோட்டை விட்டுவிட்டது என்று சொன்னால், அது குறுகிய மனப்பான்மையில் செய்யப்படும் விமர்சனமாகவே இருக்கும். காரணம், பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கான காரணங்களைத் தெளிவாக எடுத்துச்சொல்லி இருக்கிறார் மத்திய அரசின் புள்ளிவிவரத் துறையின் தலைமை அதிகாரி டி.சி.ஏ.ஆனந்த்.

மத்திய அரசாங்கம் மானியமாக செலவழித்த தொகை கடந்த ஆண்டின் இதே காலாண்டைவிட சென்ற காலாண்டில் 100% உயர்ந்துள்ளது. அதாவது, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மானியச் செலவில் சுமார் 40% சென்ற காலாண்டில் செலவழிக்கப்பட்டு இருக்கிறது.  இனிவரும் காலாண்டுகளில் மீதமுள்ள மானியத் தொகை  சராசரியாகப் பிரித்து அறிவிக்கப்படும் என்பதால், அடுத்துவரும் காலாண்டுகளில் ஜி.டி.பி. வளர்ச்சியானது அதிகமாகவே இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்