விளையாட்டின் மூலம் கிடைக்கும் பரிசுகளுக்கு வருமான வரிப் பிடித்தம் உண்டா?

கேள்வி-பதில்

? விளையாட்டு வீரர் களுக்குக்கு  கிடைக்கும் பரிசுகளுக்கு வருமான வரிப் பிடித்தம் செய்யப்படுமா?

சி.பி.ராஜு, சுண்ணாம்புகொளத்தூர்

ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர், கோவை.

“விளையாட்டின் மூலம் கிடைத்த பரிசுத் தொகை என்றால் அவர்களுக்கும் வரிப் பிடித்தம் உண்டு. இந்தியாவில் விளையாட்டின் மூலம் கிடைக்கும் பரிசுப் பணத்துக்கு 30% வருமான வரியாகச் செலுத்த வேண்டும். இதுவே கார் போன்ற ஒரு பொருள் விளையாட்டு வீரர்களுக்குப் பரிசாகக் கிடைத்தால், அதற்கான தற்போதைய சந்தை மதிப்பு எவ்வளவு உள்ளதோ, அந்தத் தொகைக்கு ஏற்ப வரிச் செலுத்த வேண்டும். இதில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மூலம் வழங்கப்படும் பரிசுத் தொகை அல்லது பொருளுக்கு வரிப் பிடித்தம் இல்லை.”

? திருமணமாகாத என் தம்பி இறந்து ஒன்றரை வருடம் ஆகிறது. அவன் பெயரில் பல வங்கி களில் பணம் வைத்திருக்கிறேன். இந்தப் பணத்தை என்னிடம் தர வங்கிகள் மறுக்கின்றன. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

கண்ணன், சென்னை

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர், சென்னை

“ஒருவருக்கு ரத்த சம்பந்த (Blood relation) உறவாக இருந்தாலும், பாதுகாப்பாளர் / துணைவர்  (Guardian / Spouse) என தனக்குப் பிறகு யார் நாமினி என்று வங்கியில் சொல்லி இருந்தால் தவிர, வங்கியில் உள்ள பணம், சொத்து சம்பத்தப்பட்ட ஆவணங்களை நீதிமன்றம் மூலம்தான் பெற வேண்டும்.

இறந்த நபருக்கு ரத்த சம்பந்த உறவு (First Class Legal Hair) உள்ள யாரும் (மனைவி மற்றும் குழந்தைகள்) இல்லாததால், நீங்கள் வசிக்கும் இடம் சென்னையாக இருந்தால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, இறங்கு வாரிசு உரிமை (Succession) பெறலாம். சென்னை தவிர பிற மாவட்டமாக இருந்தால், மாவட்ட நீதிமன்றத்தில் அசல் வழக்கு தாக்கல் செய்து உரிய நிவாரணம் பெறலாம்.”

? தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கு 75 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் சோடியம், டைட்டானியம் போன்ற தாதுக்கள் இருப்பதாகச் சொல்லி என்னிடம் விலை பேசினார்கள். இப்போது அரசே அந்தத் தாது மணலை எடுத்துக்கொள்வதாகச் சொல்கிறது. எது சரியான முடிவு? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்