குறைந்த பட்ஜெட் மனைகளுக்கு டிமாண்ட்!

நெல்லை ரியல் எஸ்டேட் நிலவரம்ஆண்டனிராஜ்

நெல்லை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் எப்படிப் போகிறது என்பதைப் பார்க்க களத்தில் இறங்கினோம். மலை, காடு, வயல் வெளி, கடல், தேரிக்காடு என ஐந்து வகை நிலங்களையும் உள்ளடக்கியது நெல்லை மாவட்டம். மக்கள், விவசாயத்தை நம்பியே வாழ்கிறார்கள். ஆண்டு முழுக்கத் தண்ணீர் பாயக்கூடிய தாமிரபரணி ஆறு இருப்பதால், ஆற்றுப்படுகைகளில் விளைநிலங்களுக்கு எப்போதுமே மவுசு இருக்கிறது.    

இதுதவிர, இந்தியா சிமென்ட்ஸ், சிப்காட் தொழில் மையம், தொழில்நுட்பப் பூங்கா, அணு உலை நிறுவனம்,  ஐ.எஸ்.ஆர்.ஓ.வின் கட்டுப்பாட்டில் உள்ள திரவ இயக்க மையம், காகித ஆலைகள், சர்க்கரை ஆலைகள், நூற்பு ஆலைகள் என மாவட்டம் முழுவதும் பரவலாக அமைந்து இருக்கும் தொழிற்சாலைகள் காரணமாக வேலை வாய்ப்பு ஓரளவுக்கு சாத்தியமாகிறது. ரியல் எஸ்டேட் தொழில் முழுமையாக முடங்கிப் போகாமல் இருக்க இவைதான் முக்கிய காரணம் என்றுகூட சொல்லலாம்.    

நெல்லை நகருக்குள் மனைகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துவிட்டதால், புறநகர் பகுதி களான தச்சநல்லூர், தாழையூத்து, சிவந்திபட்டி, டக்கரம்மாள்புரம், வி.எ.சத்திரம், கே.டி.சி நகர், சுத்தமல்லி, பேட்டை போன்ற பகுதிகளில் வீடு கட்டுவதற்கே மக்கள் விரும்புகிறார்கள். நகரின் வாகன நெருக்கடி, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றில் இருந்து விடுபட்டு காற்றோட்டமான புறநகர் பகுதிகளில் வாழவே பெரும்பாலானவர்கள் விரும்புவதால், புறநகர் பகுதிகளில் வீடுகள் ஓரளவுக்குக் கட்டப்பட்டு வருகின்றன.    

தவிர, பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் வணிக நோக்கத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் இறங்கி, சங்கரன்கோவில், மானூர், வள்ளியூர், ராதாபுரம் தாலுக்கா பகுதிகளில் நிலங்களை வாங்குவதற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு போட்டி போட்டு செயல்பட்டன.  இதனால் ரியல் எஸ்டேட் தொழிலில் அதிகமானோர் இறங்கி லட்சங்களை குவிக்கத் தொடங்கினார்கள்.

தற்போது காற்றாலை மின்சாரத்தை விற்பனை செய்வதில் சில சிக்கல்களை வர்த்தக நிறுவனங்கள் சந்தித்து வருவதால், புதிய காற்றாலை அமைப்பதில் வேகம் குறைந்திருக்கிறது. கோடிக் கணக்கில் பணம் முடங்கிக் கிடப்பதால், இப்போது பெரிய நிறுவனங்கள் காற்றாலைகளை அமைக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் காற்றலைகளுக்கான நில விற்பனையும் உற்சாகம் இழந்து காணப்படுகிறது.  இதனால் காற்று அதிகம் வீசக்கூடிய பகுதிகளில் நன்கு தொழில் செய்த புரோக்கர்கள் இப்போது சோர்ந்து போய் இருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்