பஞ்ச் பாண்டி பராக் பராக்!

‘ஷேர் மார்க்கெட் முதல் கோயம்பேடு மார்க்கெட் வரை... சேமிப்பு முதல் செலவு பண்றது வரை... நாலு வரியில சொல்லி தெறிக்கவிட, இந்த இதழ் முதல் பஞ்ச் பாண்டி என்ட்ரி ஆகிறார். தெரியும்ல... பஞ்ச் பாண்டி ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி!

மியூச்சுவல் ஃபண்டுல போடறவனுக்கு 15% லாபம் கிடைச்சாலே அது பெரிசுதான். ஷேர் வாங்குறவனுக்கு 75% லாபம் கிடைச்சாலும் அது சிறிசுதான்.

பொண்டாட்டிக்கு பூகூட வாங்கிக் குடுக்காதவன் சிக்கனப் பேர்வழி இல்ல, கடைஞ்சு எடுத்த கஞ்சன்!

டே டிரேடிங்க்ல தினமும் லாபம் சம்பாதிக்கிறவனையும் பொண்டாட்டிகிட்ட திட்டு வாங்காதவனையும் உலகத்துல பார்க்குறது அபூர்வம்!

ஆயிரம் கோடி பணத்தை வெச்சுக்கிட்டு ஒழுங்கா எட்டு மணி நேரம் தூங்க முடியலேன்னா, அம்புட்டுப் பணமும் வேஸ்ட்டுதான்!

தலை போற அவசரத்துக்குதான் கிரெடிட் கார்டு. அடிக்கடி தேய்ச்சா போக வேண்டியது சுடுகாடு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்