100 பில்லியன் டாலர்... டாடாவின் வெற்றிச் சூட்சுமங்கள்!

ஜெ.சரவணன்

148 வருட பாரம்பரியம் கொண்ட டாடா குழுமம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவி இருக்கிறது. 1991-லிருந்து தற்போது வரை நூறு மடங்குக்கு மேல் வளர்ந்திருக்கிறது டாடா நிறுவனம். இன்றைக்கு அது எட்டியுள்ள 100 பில்லியன் டாலர் வளர்ச்சி என்பது எப்படிச் சாத்தியமானது..?

இந்தக் கேள்விகளுக்கான பதிலை சமீபத்தில் சென்னை சர்வதேச மையம் (Chennai  International Centre) ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர் மற்றும் டாடா குழும நிறுவனங்களின் பிராண்ட் பாதுகாவலர் (Brand Custodian) முகுந்த் ராஜன் விரிவாக எடுத்துச் சொன்னார். இவர், ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் சகோதரர். 

“1990-களில் இந்தியா வின் முதல் பத்து நிறுவனங் களில் டாடா நிறுவனம் இருந்தது.இப்போதும் இருக் கிறது.  டாடாவின் தயாரிப்புகள் பல இன்றும் முதலிடத்தில் உள்ளன. கடந்த காலங்களில் டாடா குழுமம் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டிருந்தா லும், தொடர்ந்து முன்னிலையில் இருப்பதற்கு காரணம், ரத்தன் டாடாவின் உழைப்பும், அவர் கொண்டுவந்த புதுமைகளும் தான்!

டாடா நிறுவனம், சமூகத்தின் அனைத்துப் படிநிலையிலும் உள்ள மக்களைத் தனது வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது. டாடாவின் மிக முக்கியமான பலம், புதுமை களில் முதலீடு செய்ததும், தகுதியான பொருட்களையும், நிறுவனங்களையும் அடையாளம் கண்டுபிடித்து அவற்றுடன் கூட்டு சேர்ந்ததும் ஆகும்.

டாடா குழுமத்தில் எடுக்கப் பட்ட ஏதோ ஒரு முடிவு அல்லது தயாரிப்பு தவறு எனத் தெரிய வந்தால், உடனே நடவடிக்கை எடுக்கப்படும். டாடா எப்போ தும் குறுகிய காலத்துக்குத்  திட்டமிடுவதில்லை. நீண்ட கால திட்டமிடலே டாடாவின்  வெற்றிக்கு காரணம்” என்றவர், முத்தாய்ப்பாக, ‘‘2025-ல் உலகில் 25 சதவிகித மக்கள் டாடாவின் தயாரிப்புகளைப் பயன்படுத்து பவர்களாக இருப்பார்கள்’’ என்று பேசி முடித்தார். 

டாடா, இந்தியாவின் பெருமைக்குரிய நிறுவனம் என்பதில் சந்தேகமே இல்லை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்