வாழ வைக்கும் வடை!

விற்பனையில் கலக்கும் ‘ஒரு ரூபாய்’ உத்தி!ஆண்டனிராஜ், செ.ராஜன்

டை விற்பனையில் சத்தமில்லாமல் சாதனை செய்து வருகிறார், நெல்லையைச் சேர்ந்த ஒருவர். ஒரு ரூபாய்க்கு வடை விற்பனை செய்வதால், இவரது கடையில் எப்போதும் கூட்டம் ஜேஜேதான்! 

நூறு வருடங்களுக்கு முன்பு ஒரு ரூபாய் இருந்தால், ஒருவர் ஒரு நாளில் ராஜ வாழ்க்கை வாழ்ந்துவிடலாம். ஒரு  ரூபாய்க்கு அவ்வளவு மதிப்பிருந்த காலம் அது. ஆனால், இன்றைக்கு ஒரு ரூபாயை யாரும் மதிப்பதில்லை. விலைவாசி விண்ணை முட்டிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், கடந்த 15 வருடங்களாக நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ‘ஒரு ரூபாய் வடை கடை’யில் வடையின் விலை உயரவே இல்லை என்பது அதிசயமான உண்மை.

இந்தக் கடையின் உண்மையான பெயர் ஜெயந்தி டீ ஸ்டால். சின்னக் கடைதான்.  ஆனால் வேலை செய்யும் தொழிலாளர்களும், அந்தக் கடையைச் சுற்றி நிறைந்திருக்கும் வடை பிரியர்களும் என கடை முன்னால் எப்போதுமே கூட்டம் அலைமோதுகிறது. இந்த வடைக் கடைக்கு அருகில் பள்ளி, கல்லூரிகள் அமைந்திருப்பதால் மாலை நேரத்தில் மாணவர்கள் கூட்டம் வேறு முட்டி மோதுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்