நாணயம் லைப்ரரி: நம் வளர்ச்சியைத் தடுக்கும் ஓவர் கான்ஃபிடன்ஸ்!

புத்தகத்தின் பெயர்: ஸ்டால் பாய்ன்ட் (Stall Point)

ஆசிரியர்: மேத்யூ எஸ் ஓல்சன் மற்றும் டெரெக் வேன் பீவர் (Matthew S.Olson and Derek Van Bever)

பதிப்பித்தவர்: ரேவ் மீடியா (Rave Media)

மேத்யூ எஸ். ஓல்சன் மற்றும் டெரெக் வேன் பீவர் என்ற இருவரும் சேர்ந்து எழுதிய ‘ஸ்டால் பாயின்ட்’ என்னும் புத்தகத்தை இந்த வாரம் பார்க்கலாம். ஆங்கிலத்தில் ‘ஸ்டால்’ என்றால் நிற்பது என்று அர்த்தம். ஒரு நிறுவனம் மேற்கொண்டு வளராமல் நின்றுபோகும் இடம் எது என்பது குறித்தும், அப்படி நின்றுவிடாமல் மேற்கொண்டு தொடர்ந்து வளர்வது குறித்தும் சொல்வதே இந்தப் புத்தகம்.

நிர்வாக மேலாண்மையிலேயே அதிகம் புரிந்துகொள்ளப்படாத பகுதி என்னவெனில், கம்பெனி களின் வளர்ச்சியானது தடை படாமல் தொடர்ந்து எப்படி முன்னேற்றிக்கொண்டே செல்வது என்பது பற்றிதான். இதில் கொடுமையான விஷயம் என்னவெனில், நாம் ஏன் முன்னோக்கிப் போவதற்குப் பதிலாக பின்னோக்கிச் செல்கிறோம் என்பதை யோசித்து, அதற்கான அடிப்படைக் காரணத்தை கண்டுபிடிக்கும் வேளையில், நிலைமை நம் கையை மீறிப்போயிருக்கும்.

ஒருகாலத்தில் வேகமாக வளர்ந்து, பிற்பாடு வேகம் இழந்து, நொண்டி அடிக்கும் நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்த்திருந்தீர்கள் எனில் ஒரு விஷயம் உங்களுக்கு தெளிவாகத் தெரிந்திருக்கும். கீழே விழுவது என்பது கம்பெனி சுதாரிக்கும் முன்பே எதிர்பாராத வேகத்தில் நடந்திருக்கும். அதாவது, ஓடிக் கொண்டிருக்கும் வேகத்தை விட இரு மடங்கு வேகத்தில் விழத் தொடங்கியிருக்கும். நிறுவனத்தின் டிரைவர் சீட்டில் (நிர்வாகிகள்) இருக்கும் நபர்களுக்கு இது உடனே தெரிய ஆரம்பித்துவிடும். இந்த சமயத்தில், நாம் பார்க்காத ஏற்ற இறக்கமா என்று அலட்சியப்படுத்துவதுதான் அந்த நிறுவனம் அசுர வேகத்தில் நின்றுபோகும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இதுபோன்ற நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்ட நிறுவனமாக இருந்தால், பத்தே வருடங்களில் 74%  மதிப்பை இழந்துவிடுகின்றன.

உங்கள் நிறுவனம் இப்படி தடாலடியாக நின்றுவிடும் வாய்ப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப் படுகிறீர்களா? பின்வரும் விஷயங் களில்  எவையெல்லாம் உங்களுக்கு சரி என்று படுகிறதோ அவற்றை டிக் அடியுங்கள்.

நம்முடைய வாடிக்கை யாளர்கள் நம்முடைய நிறுவனத் தின் புதுப்புதுக் கண்டுபிடிப்பு களுக்கு அதிக விலையைத் தொடர்ந்து தந்துகொண்டே இருப்பார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்