வியாபாரச் சிறுகதை!

சிறிய மாற்றங்கள்... பெரிய சாதனைகள்!பார்த்தசாரதி ரெங்கராஜ்

ரு பொருளில் அல்லது வேலையில் சிறிது குறையைக் கண்டுபிடித்தால், அதன் மீதான நம் கவனம் அதிகமாகும். அந்தக் குறையைச் சரிசெய்யும் வரை நமக்கு நிம்மதி இருக்காது.

ஆனால், அது முடியாத காரியம் போலத்தான் பலருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நேரத்தில்தான் என் போன்ற ஒருவர்  உங்களுக்குத் தேவைப்படுவார்.

நான் ஒரு கன்சல்டன்ட். தீர்வைக் கையில் வைத்துக் கொண்டு அதற்குத் தேவையான பிரச்னைகளைத் தேடி அலைபவன். இதில் வேடிக்கை என்னவென்றால், பொதுவாக அந்த தீர்வே பிரச்னையின் உள்ளேதான் இருக்கும்.

போன மாதம் ஓர் ஓட்டப் பந்தய வீரருடன் ஒரு சின்ன கவுன்சலிங். எப்போதும் முதலாவதாக வரும் அவர், தொடர்ச்சியாக மூன்று முறை இரண்டாவதாக வந்தது என்னை அவரிடம் அழைத்துச் சென்றது. சில மணி நேர அலைச்சல்களுக்குப் பின் நான் அறிந்தது என்னவென்றால், “ வெற்றி பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் , அவரது முதல் நிமிட வேகம் மிக அதிகமாக இருந்தது. அவர் தோற்ற மூன்று போட்டிகளிலும், அவரது முதல் நிமிட சறுக்கல்களே தோல்விக்கு காரணமாக இருந்தன.

இதைத் தெரிந்தவுடன் சொல்லியிருந்தால் அவர் நம்பியிருக்க மாட்டார். சொல்வதற்கு நான் ஒன்றும் நற்பணி மன்றம் நடத்துபவனும் அல்ல. எனவே, நான் ஒரு வார நேரம் எடுத்துக்கொண்டு அவருடனே பயணித்து, அவருடன் உண்டு, உறங்கி (எல்லாம் அவர் செலவில்), எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேள்வி கேட்டு, முடிவில் ஒரு நல்ல நாளில் அவரை உட்கார வைத்து, சில மணி நேரங்களைச் செலவிட்டு, நான் என்னென்ன கவனித்தேன், எதை எதனுடன், யாருடன் ஒப்பிட்டேன் என்றெல் லாம் அவருக்குப் புரியும்படி ஒரு பிரசன்டேஷன் கொடுத்தேன். அதாவது, அவர் எனக்குத் தந்த தீர்வையே, அருமையாக அரைத்து அவருக்கே பரிமாறி, நான் பெற்றது ஐந்து லகர சன்மானம்; என் நிறுவனம் எனக்களிக்கும் சம்பளம்.

இதோ இப்போது ஒரு புது வாடிக்கையாளர், புதுமையான கோரிக்கையுடன் வந்திருக்கிறார். இந்த முறை என்னிடம் பிரச்னையும் இல்லை, தீர்வும் இல்லை. இரண்டையும் நானே கண்டுபிடித்தாக வேண்டும். ஆம், அது ஒரு பன்னாட்டு கார் தயாரிக்கும் நிறுவனம். இந்தியாவை ஒரு தொலைநோக்கு சிந்தனையுடனும், வருங்கால இந்தியர்கள் வீட்டுக்கொரு கார் வாங்கிப்போட்டு, விவசாயம் பார்ப்பார்கள் என்ற எண்ணத்து டனும் வந்த சில நிறுவனங்களில் இதுவும் ஒன்று .

சில வருடங்களாகவே இவர்களது டீலர்களின் லாபம் குறைந்து கொண்டே வந்து கொண்டிருக்கிறது.இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, வாடிக்கை யாளர் சேவை . கார் வாங்குபவர்கள், சர்வீஸ் பற்றி முதலில் பேசுகிறார்கள். கார் டீலர்கள் நல்லதொரு சர்வீஸை, தங்கள் ஒர்க்‌ஷாப்பில் தராதபட்சத்தில், அதனால் கார் விற்பனை நிச்சயம் பாதிப்படையும். இதுதான் காரணம் என்று தெரிந்தவுடன், அனைத்து டீலர்களையும் அழைத்து, வாடிக்கை யாளர் சேவைப் பிரிவை இன்னும் கவனத்துடன் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியது நிறுவனத்தின் நிர்வாகம்.

பிரச்னையையும் கண்டுபிடித்தாகிவிட்டது; தீர்வையும் சொல்லிவிட்டார்கள். பிறகு ஏன் என்னை அழைத்தார்கள்?

அந்த நிறுவனத்தின் எல்லா டீலர்களுமே நஷ்டமடைந்த வேளையில், ‌சென்னை தாம்பரம் அருகில் உள்ள ஒரு டீலரின் ஒர்க்‌ஷாப்  ஏகபோகமாக ஓடிக் கொண்டிருந்தது, நமது கார் நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்தது. அதன் விளைவு,  இதோ நான்!

அவர்கள் அப்படி என்ன செய்கிறார்கள்  என்பதை தெரிந்துகொள்ள, மொத்த ஒர்க்‌ஷாப்  பற்றியும் நான் தெரிந்து கொள்ள வேண்டும். பின் மற்றவர்கள் ஏன் நஷ்டத்தில் இருக்கிறார்கள் என்பதையும் அறிந்தபிறகே நான் தீர்வைச் சொல்ல முடியும். கடந்த பத்து நாட்களில் சென்னை முழுவதும் சுற்றி பல ஒர்க்‌ஷாப்களைப் பார்த்துவிட்டு, இன்று, இப்போது தாம்பரத்தில் இருக்கும் இந்த திருமுருகன் ஆட்டோமொபைல் நோக்கி செல்கிறேன், அந்த ரகசியத்தை அறிய!

திருமுருகன் ஆட்டோ மொபைல்... ஒரு சாதாரண தமிழ்ப் பெயர். பெயர் ஒரு நல்ல காரணமாக வாய்ப்பில்லை.  பொதுவாக, கார் பழுது பார்க்கும் ஒர்க்‌ஷாப் பெயரை ஆங்கிலத்தில் வைப்பது நல்ல வரவேற்பை அளிக்கும். ஏனென்றால், தொழில் நுட்பம் மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்தது. மேற்கத்திய பெயர்கள் வைப்பதன் மூலம் நல்ல தொழில்நுட்பம் பயின்றவர்கள் என்ற ஒரு நல்லெண்ணத்தை உருவாக்கும். எனவே, திருமுருகன் என்ற பெயருக்கு மைனஸ் 10 மார்க்  தந்தேன்.

தாம்பரம் சென்றபிறகு, முகவரி தேடி அலைவதற்குப் பதிலாக ஜிபிஎஸ்-ல் தேடி சலித்துப் போனேன். இந்தக் காலத்தில் கூகுள் மேப்பில் வராத ஒரு நிறுவனம் கண்டிப்பாக அரதப்பழசாக இருக்க வேண்டும். எனவே, இன்னொரு 10 மார்க் மைனஸ் ஆனது.

நான் வருவது தெரிந்தால், ஏதாவது முன்னேற் பாடு செய்வார்கள் என்பதால், சொல்லாமலே சென்றேன். வழக்கம்போல, எல்லா ஒர்க்‌ஷாப் போல இங்கேயும் வழியில் நிற்க வைத்து, கேள்வி கேட்டு வெறுப்பேற்றியே என்னை உள்ளே அனுப்பினார்கள்.

ஒர்க்‌ஷாப்பை சுற்றிச் சுற்றி பார்த்த பின்பும் என்னால் பெரிய வித்தியாசம் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘இன்று ஒரு நாள் இன்ஜின் ஆயில் இலவசம்’ என்கிற வழக்கமான அறிவிப்பு கொஞ்சம் ஒர்க்அவுட் ஆனாலும், அதனால் வியாபாரம் பிய்த்துக்கொண்டு போக வாய்ப்பில்லை. ‌அவர்களுடைய கணினிகளை ஆராய்ந்ததில், அவர்களின் சர்வீஸ் ஒன்றும் மிகத் தரமானது என்றும் சொல்லமுடியாது.  

மூன்று மணி நேரம் சுற்றி ஆராய்ந்த பிறகும், என்னால் எந்தவொரு முடிவுக்கும் வரவே முடியவில்லை. ஆனால், ஒரு விஷயம் உண்மை.  மற்ற ஒர்க்‌ஷாப்களைவிட இங்கு கூட்டம் அதிகம். அனைவருமே வேலை பரபரப்பில் இருந்தனர். அதற்கான காரணம் அறியும் முயற்சியில்தான் நான் தோல்வியின் விளிம்பில் இருந்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்