கிரெடிட்/டெபிட் கார்டு அபாயம்... ஒரே நிமிடத்தில் குளோனிங்!

சமாளிக்கும் வழிகள்தமிழ்த்தென்றல்

செய்தி 1

பஹ்ரைனில் போலி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, ரூ.28 லட்சம் மதிப்புள்ள 45 ஸ்மார்ட் போன்களை ஆர்டர் செய்த மர்ம நபர்கள்.

செய்தி 2

டோக்கியோவில் 1,400 ஏ.டி.எம். மெஷின்களில் இருந்து கிட்டத்தட்ட 1.44 பில்லியன் யென், அதாவது 13 மில்லியன் டாலர்கள் திருட்டு!

செய்தி 3

பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் ரூ. 6 லட்சம் பண மோசடி.

- இந்தச் செய்திகள் அனைத்துக்கும் உள்ள ஒற்றுமை,  அது கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மோசடி சமாசாரம்தான்.

‘என் கார்டை நான் மிஸ் பண்ணவே இல்லையே... நான் என்னோட பின் நம்பரை என் லவ்வர்கிட்டகூட சொல்ல மாட்டேனே’ என்று உங்களுக்கு நீங்களே பெருமைப்பட்டுக் கொண்டால், உங்களுக்குச் சில அதிர்ச்சித் தகவல்கள் காத்திருக்கின்றன.

உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டு உங்கள் பர்ஸுக்குள் பத்திரமாக இருக்க, உங்கள் அக்கவுன்ட்டிலிருந்து பணத்தைச் சுரண்டியெடுக்கும் இந்த அண்டர்கவர் திருட்டு ஆபரேஷனுக்குப் பெயர் ‘கார்டு குளோனிங்’. அதாவது, உங்கள் கிரெடிட் கார்டை அப்படியே ‘எந்திரன்’ ரஜினி மாதிரி எக்கச்சக்கமாக டூப்ளிகேட் செய்து ஆன்லைனிலோ, ஏடிஎம்-மிலோ ஆட்டையைப் போடுவதுதான் இன்றைய லேட்டஸ்ட் ட்ரெண்ட்.

இந்த டூப்ளிகேட்டிங் டெக்னிக் இந்தியாவில் இன்னும் பெரிய அளவில் நடக்கவில்லை என்பது நிம்மதி தரும் விஷயம்தான். ‘‘ஆனால், இது இந்தியாவுக்கு வரும் நாள் விரைவில் இல்லை!’’ என்று அதிர்ச்சியூட்டினார் வினோத் செந்தில். சென்னை அரும்பாக்கத்தில், ‘Infysec’ என்னும் இன்டர்நெட் செக்யூரிட்டி நிறுவனத்தின் உரிமையாளர். லேசான தாடியோடு கரகர குரலில் சயின்ட்டிஸ்ட் மாதிரியே இருக்கும் வினோத்தை, ஒரு ஆன்லைன் விஞ்ஞானி என்றே சொல்லலாம்.

‘‘ஒரு நிமிஷத்துல உங்க கார்டை குளோனிங் பண்ணிக் காட்டவா?’’ என்று நம் கார்ட்டை வாங்கி குளோனிங் செய்து நம்மை வியர்க்க வைத்துவிட்டார் வினோத். ‘‘இதை வெச்சு நீங்க பர்ச்சேஸ் பண்ணலாம்!’’ என்றவர், பர்ச்சேஸும் பண்ணிக் காட்டினார்.

“இதையெல்லாம் வச்சு என்னை சந்தேகப்பட்டுடாதீங்க... இது எல்லாமே ரிசர்ச் பர்ப்பஸுக்காகத் தான்!” என்றவர், ‘‘உங்கள் பின் நம்பரைத் திருடும் தெர்மல் இமேஜ் டெக்னாலஜிகூட வந்தேவிட்டது. எனவே, கார்டு பர்ச்சேஸிங்கில், ஆன் லைன் ஷாப்பிங்கில், ஏடிஎம்-மில், நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார். மேலும், கார்டு குளோனிங் பற்றி  அவர் விரிவாக எடுத்துச் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்