கம்பெனி ஸ்கேன்: ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்

(NSE SYMBOL: HATSUN)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம், தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்குமே நன்கு பரிட்சயமான தயாரிப்புகளை செய்துதரும் ‘ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்’ என்னும் நிறுவனம்.

1970-ம் ஆண்டில் ‘ஆர்.சந்திரமோகன் அண்ட் கம்பெனி’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 1986-ம் ஆண்டில் ‘ஹட்சன் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று பதிவு செய்யப்பட்டு, பின்னர் 1998-ல் ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்துவருகிறது இந்த நிறுவனம்.  அருண் ஐஸ்கிரீம்ஸ் மற்றும் ஆரோக்யா பால் என்கிற இரண்டு பிராண்டுகளும் வாடிக்கையாளர் மத்தியில் மிகப் பெரிய நன்மதிப்பைப் பெற்று அனைவரும் விரும்பி வாங்கும் பிராண்டுகளாகவும் திகழ்கின்றன. அருண் ஐஸ்க்ரீம், தென் இந்தியாவில் மிக அதிக அளவில் விற்பனை செய்யப்படும் ஐஸ்க்ரீம் பிராண்டாக திகழ்கிறது. அதேபோல், ஆரோக்யா பால் இந்தியாவில் பெரியதொரு தனியார் பால் பிராண்டாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.

நீண்ட அனுபவத்தைக் கொண்டிருப்பதால், பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கையாளுவதில் மிகுந்த திறமை வாய்ந்த நிறுவனமாகத் திகழ்கிறது இந்த நிறுவனம். பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் இருக்கும் இதுபோன்ற நிறுவனங்களை மதிப்பீடு செய்யத் தேவையான காரணிகள் என்று பார்த்தால், நேரடி பால் கொள்முதல் மற்றும் விநியோகம், விற்பனையில் வரும் லாபம் போன்றவைதான். அந்த வகையில் நேரடி பால் கொள்முதல் விஷயத்தில் நல்ல அனுகூலங்களைக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். 

பால் கொள்முதல்!

கிட்டத்தட்ட 8,500 கிராமங்களில் இருக்கும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளிடம் இருந்து பாலை நேரடியாகக் கொள்முதல் செய்கிறது இந்த நிறுவனம். இப்படிக் கொள்முதல் செய்யப்பட்ட பாலைக் குளிர்விப்பதற்காக 68 இடங்களில் அதற்கான வசதிகளைக் கொண்டுள்ளது. பாலை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்ல 1,348 ஒப்பந்த வாகனங்களைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். தமிழ்நாட்டில் பத்து மாவட்டங்களிலும், கர்நாடகாவில் மூன்று மாவட்டங்களிலும் பால் ஷெட்களை கொண்டுள்ளது இந்த நிறுவனம். இது தவிர, விவசாயிகளுக்கு பால் உற்பத்தியில் உதவும் வண்ணம் சேவைகளை வழங்கிவரும் இந்த நிறுவனம், 1,110 கால்நடை மருத்துவர்களை பணியில் அமர்த்தி அவர்கள் மூலம் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நன்கு பராமாிக்கத் தேவையான உதவிகளை செய்கிறது. இதுவும் தவிர, கால்நடைகளை வாங்குவதற்கு வங்கிக் கடன்களை விவசாயிகள் பெறத் தேவையான உதவிகளையும் இந்த நிறுவனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங்!

இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட பாலை தமிழ்நாட்டில் சேலம், காஞ்சிபுரம், மதுரை, பாலக்கோடு மற்றும் தலைவாசல் ஆகிய இடங்களிலும்,  கர்நாடகாவில் ஹொன்னாலி மற்றும் பெல்காம் ஆகிய இடங்களிலும் சேர்த்து 10 பிராசஸிங் வசதிகளைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த பிராசஸிங் வசதிகளில் உலகத்தரம் வாய்ந்த இயந்திரங்களையும், நல்ல அனுபவமிக்க பணியாளர்களையும் கொண்டு, பால் பதப்படுத்துதல் மற்றும் நிலைப்படுத்தல் போன்றவற்றை சுத்தமாகவும் மக்களின் ஆரோக்கியம் காக்கும் வகையிலும் செய்து வருகிறது இந்த நிறுவனம். பால் சம்பந்தப்பட்ட இடுபொருட்களை (Ingredients) அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் 38 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது இந்த நிறுவனம்.

விநியோகம்!

பாலை விநியோகம் செய்ய அன்றாடம் பஃப் (Puff) எனும் குளிர்விப்பு வசதி பொருத்தப்பட்ட ட்ரக்குகள் 1,82,730 கிலோ மீட்டர் தூரம் பயணித்து,  தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா (சில பகுதிகள்) மற்றும் கோவாவில் பால் விநியோகத்தை செய்துவருகிறது. மிகப் பெரிய எண்ணிக்கையில் பால் குளிர்விப்பு நிலையங்களை தன்வசம் கொண்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் புத்தம் புதிய பாலை ஒவ்வொரு நாளும் பெறும் வகையில் ஏற்பாடுகளைச் செய்துள்ளது இந்த நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்