மசாலா பாண்டுகள் வெளியீடு... வெளிச்சம் பெறுமா இந்திய வங்கித் துறை?

வி.கோபாலகிருஷ்ணன், நிறுவனர், மணி அவென்யூஸ் (Money Avenues).

ந்தியப் பொருளாதாரம் வரும் காலங்களில் அபரிமிதமான வளர்ச்சியைக் காணும் என சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்.), உலக வங்கி போன்ற பல்வேறு நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்த அபாரமான வளர்ச்சியை எட்டுவதற்கு நாட்டின் தொழில் துறையும் அது சார்ந்த துறைகளும் அதிவேகமாக வளர்ந்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகும்.

சில ஆண்டுகள் முன்பு வரை கடுமையான தள்ளாட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் இருந்த சூழலில், தொழில் துறை முடக்கம் பொருளாதாரச் சிக்கலை மேலும் அதிகப்படுத்தியது. அதன் காரணமாக வங்கிகளின் வாராக் கடன்களின் அளவு வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதன் தாக்கம் இந்திய வங்கித் துறையில் இன்னும் விலகாத சூழலில் தொழில் துறையினருக்கு தங்களின் வளர்ச்சிக்காக தேவைப்படும் கடன் போதிய அளவு கிடைக்காமலே இருந்து வருகிறது.

வங்கிகளுக்கு அனுமதி!

வாராக் கடன் பிரச்னைகள் இன்னும் தீராத காரணத்தால் பல வங்கிகளும் கடன் தருவதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றன. அதுமட்டுமல்லாது, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் என்னும் வட்டி விகிதத்தைக் குறைத்தும்கூட, அதன் முழுப்பலன் இன்னும் பொருளாதாரத்திலும் கடன் வழங்குதலிலும் பிரதிபலிக்க வில்லை. அதன் காரணமாக கடன் வட்டியில் பெரிய மாற்றங்கள் இல்லாதது தொழில் துறைக்கு ஒரு பின்னடைவே.

இந்தச் சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த ஆண்டில் மசாலா பாண்டுகள் என வழங்கப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு என்று பிரத்யேகமாக இந்திய நிறுவனங்களால் வழங்கப்படும் ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்களுக்கு அனுமதி அளித்தது. தனது பதவிக் காலம் முடிவதற்கு சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த அனுமதியை அளித்தார் ஆர்.பி.ஐ. கவர்னர் ரகுராம் ராஜன்.

இந்தியத் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக கடன் வாங்க முடியாதபட்சத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர் களிடம் இதுபோன்ற கடன் பத்திரங்கள் மூலம் கடன் வாங்கலாம் என்பதே இதன் சிறப்பம்சம். முதலில் இந்த அனுமதி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே என்று இருந்த சூழலில், தற்போது வங்கிகளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மசாலா பாண்டுகளை வழங்கி கடன் பெறலாம்  என்று  அறிவித்து உள்ளது ஆர்.பி.ஐ. 

மசாலா பாண்டுகள் என்பது...


அடிப்படையில், பாண்ட் என்றால் கடன் பெறுவதற்காக வழங்கப்படும் கடன் பத்திரம் என்று அர்த்தம். கடன் பத்திர வெளியீடு மூலம் கடன் பெறுவது நிறுவனங்களின் வாடிக்கை. கடந்த காலங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர் களிமிருந்து இந்திய நிறுவனங்கள் கடன் பெறுவது இ.சி.பி. (ECB- External Commercial Borrowings) என்று சொல்லப்படுகிற வழிமுறை மூலம்தான். அந்த வழிமுறை மூலம் கடன் பெறுவது நிறுவனங்களுக்கு மிகக் கடினம். ஏனெனில் அந்த வழிமுறையால் நிறுவனங்கள் வெளிநாட்டு கரன்சி மதிப்பில் தான் கடன் பெறவேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்