ஆன்லைன் ஷாப்பிங்... பாதுகாப்புக்கு வழி என்ன?

ன்றைக்கு பல்வேறு நகரங்களில் உள்ள மால்களில் இயங்கும் கடைகள் காற்றாடுகின்றன. இதற்கு முக்கியமான காரணம், ஆன்லைன் ஷாப்பிங்  என்றால் யாரும் மறுக்க முடியாது.

குக்கிராமம் தொடங்கி மெட்ரோ நகரங்களில் வசிக்கும் அனைவரும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யத் தொடங்கிவிட்டார்கள். இதில் ஊசி முதல் வீடு வரை வாங்க முடியும்.

பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருக்கின்றன. கட்டிய பணத்துக்கு சரியான பொருட்கள் வந்து சேர்வதில்லை என்பதில் தொடங்கி,  உபயோகம் இல்லாத பொருளை அனுப்பிவிட்டார்கள் என பல புலம்பல்களைக் கேட்க முடிகிறது.  

மேலும், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் போது பலவித பிரச்னைகள்... ஒருமுறைக்கு இரு முறை பணம் எடுக்கப்படுவது அல்லது வங்கிக் கணக்குகள் பற்றிய விவரங்களைத் திருடி பணத்தை எடுப்பது என தினமும் பல பிரச்னைகள்.

நீங்கள் ஆன்லைன் மூலம் அடிக்கடி பொருட்களை வாங்குபவரா? சிறந்த பொருட்கள், நியாயமான விலை, நல்ல ஆஃபர்களை எதிர்பார்க் கிறீர்களா? உங்களைப் போன்றவர்களையும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியையும் இணைப்பதுதான் ‘விகடன் ஹேக்கத்தான்.’

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் திகழும் நிறுவனங்கள் கலந்துகொள்ளும் இந்த ‘விகடன் ஹேக்கத்தான்’ நிகழ்வில் மாற்றத்தை விரும்பும் யாரும் இணையலாம்.

கல்வி, விவசாயம், கேளிக்கை, வேலைவாய்ப்பு மற்றும் சமூகத்தின் ஆற்றல் என்கிற தலைப்பில் தனிநபராகவோ அல்லது குழுக்களாகவோ தங்களுடைய பிரச்னைகளையும், அதைத் தீர்ப்பதற்கான மாதிரியையும் உருவாக்க வேண்டும். மூன்று சிறந்த தீர்வுகளுக்கு 1.5 லட்சம் ரூபாய் பரிசு உண்டு!

இந்த நிகழ்வு செப்டம்பர் 23 முதல் 25 வரை சென்னையில் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள பதிவு செய்ய கடைசி நாள் செப்டம்பர் 5.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்