செப்டம்பர் எச்சரிக்கை... சந்தை சரியுமா?

மு.சா.கெளதமன்

ந்திய பங்குச் சந்தைகள் கடந்த ஆகஸ்ட் 31 அன்று 52 வார உச்சத்தைத் தொட்டது. சென்செக்ஸ் 28,452 புள்ளிகளாகவும் நிஃப்டி 8,786 புள்ளிகளாகவும் உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

ஆனால், கடந்த காலங்களில் செப்டம்பரில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் முதலீடு ஏதும் செய்யாமலே இருந்திருக்கிறார்கள். 2008 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை அதிகப்படுத்துவதற்கு பதிலாகத் திரும்ப பெறவே செய்து உள்ளனர். அந்த நிலை இந்த செப்டம்பரிலும் தொடருமா, இந்த செப்டம்பரில் பங்குச் சந்தை சரியுமா என பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம். நம் கேள்விக்கு விளக்கமான பதிலைத் தந்தார் அவர்.

 காய்ச்சல் வந்த ஜூன் காலாண்டு!

“இந்த நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகள் (ஜூன் 2016) கலவையாகத்தான் வந்திருக்கின்றன. பொதுவாக, சந்தை இப்படி புதிய உச்சங்களையும்,  அதிகப் புள்ளிகளை யும் தொட்டு வர்த்தகமாகும் புல்லிஷ் டிரெண்டில், காலாண்டு முடிவுகளும் பாசிட்டிவாகவே இருக்கும். ஆனால், இந்த முறை கலவையாகவே  வந்திருக்கிறது.

எனினும், இந்த காலாண்டு முடிவுகளை நெகட்டிவ் என்று சொல்ல முடியாது. எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். அதிலும் குறிப்பாக, ஆட்டோ மொபைல் போன்ற துறைகள் நல்ல காலாண்டு முடிவுகளையே தந்திருக்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்