பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர் குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை.SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ் :

பல வார ஆர்ப்பாட்டங்கள், பிரச்னைகள் மற்றும் செய்திகளுக்கேற்ப ஏறியிறங்கிய நிஃப்டி  8700 என்கிற வலுவான லெவலிருந்து  பிரேக் அவுட் ஆகி வர்த்தகமாகி வருகிறது.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று நடந்த பிரேக் அவுட் தெளிவானதாக இருந்தது. சந்தை 8700 என்கிற லெவலை உறுதியாகத் தாண்டிவிட்ட தாக டிரேடர்களுக்கு உணர்த்தியது. செவ்வாய்க்கிழமை வர்த்தகம் நிறைவடையும் தருணத்தில், இண்டெக்ஸ் புள்ளிகள் அதிகரித்தது  குறிப்பிடத்தக்கது. இந்த பிரேக் அவுட்டைத் தொடர்ந்து நல்ல ஏற்றத்தை சார்ட்களிலேயே பார்க்க முடிகிறது.

செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு, சந்தைகள் நிலை பெற்று, கன்சாலிடேட் ஆகி வர்த்தகமானது.  வங்கித் துறை சார்ந்த பங்குகள் நல்ல ஃபார்மில் இருக்கின்றன.  வங்கிப் பங்குகளின் முன்னேற்றம் அப்படியே நிஃப்டி இண்டெக்ஸிலும் பிரதிபலித்தது. அதுமட்டுமின்றி, கடந்த வெள்ளிக்கிழமை ஐ.டி. இண்டெக்ஸ் கிட்டதட்ட தன் பழைய நிலைக்கு உயர்ந்தது  கவனிக்க வேண்டிய விஷயம். நிஃப்டி 50 பங்குகளில், ஐடி பங்குகள்,  20 சதவிகித வெயிட்டேஜ்யைக் கொண்டுள்ளன.  எனவே, வங்கிப் பங்குகள் தொடர்ந்து நன்றாக செயல் பட்டாக வேண்டும் என்கிற அழுத்தத்தை இந்த ஐ.டி. துறையின் ஏற்றம் குறைத்திருக்கிறது.

வங்கி, ஐ.டி. போன்ற துறைகளைத் தொடர்ந்து ஆட்டோமொபைல்  பங்குகளும் நன்றாகவே செயல்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் எனர்ஜி துறை சார்ந்த பங்குகளும் சீரான டிமாண்டில் வர்த்தகமாக தொடங்கி இருக்கிறது. அடுத்து வரும் வாரங்களில் எனர்ஜி துறை சார்ந்த பங்குகள் இன்னும் நன்றாக செயல்படத் தொடங்கினால், நிஃப்டியின் உயர்வுக்குக் கூடுதல் பலம் சேர்ப்பதாக இருக்கும். எனவே, அடுத்து வரும் வாரங்களில் நிஃப்டி நன்றாகவே உயர்ந்து, மீண்டும் புதிய உச்சங்களைத் தொட்டு வர்த்தகமாக வாய்ப்புள்ளது என்பதையே மேற்கூறியவை சுட்டிக் காட்டுகின்றன.

நிஃப்டி ஃப்யூச்சர்ஸில் லாங் எடுக்க விரும்புபவர்கள், தற்போதைய 8800 என்கிற லெவல்களில் எடுக்கலாம். 8750 புள்ளிகளை ஸ்டாப்லாஸாக வைத்துக்கொள்ளவும். இலக்காக 8925 லெவலை  வைத்துக்கொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்