முதல்வரே, முதலில் நஷ்டத்தைத் தடுத்து நிறுத்துங்கள்!

ஹலோ வாசகர்களே..!

முதல்வரே, முதலில் நஷ்டத்தைத் தடுத்து நிறுத்துங்கள்!

அரசு நிறுவனங்களின் மோசமான செயல்பாட்டினால் தமிழக அரசாங்கம் தினமும் சராசரியாக 40 கோடி ரூபாயை இழந்து வருகிறது. மத்திய அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் இந்த அதிர்ச்சி தரும் உண்மை சொல்லப்பட்டு இருக்கிறது. புதிய வருமானத்துக்கான வழிகள் வேகமாகக் குறைந்துவரும் நிலையில், இப்படிப்பட்ட இழப்புகளை அரசாங்கம் எப்படி சகித்துக் கொண்டிருக்கிறது என்பது புரியாத புதிர்.

அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் நிறுவனங்களில் முதலிடத்தைப் பெற்றிருக்கின்றன, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும் (Tangedco) தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் (Tantransco). இந்த இரு நிறுவனங்கள் மூலமாக ஏற்பட்ட திரண்ட இழப்பு (Accumulated Losses) மொத்தம் ரூ.54,952.89 கோடி. சரியான நிர்வாக மின்மை, வெளிச் சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது போன்ற காரணங்கள் ஒருபக்கமிருந்தாலும், மின் திருட்டுதான் மிக முக்கிய காரணம். அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகள் மட்டுமல்ல, சிறிய கட்சிகள்கூட கூட்டம் நடத்தும்போது பயன்படுத்தும் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசுக்குச் செலுத்துவதில்லை. மூலப் பொருட்களை வாங்குவதில் தொடங்கி, பல்வேறு வேலைகளுக்கான கான்ட்ராக்ட் அளிப்பது வரை லஞ்சம் தலைவிரித்தாடுவதால், இழப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது.  

எட்டு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் ஏற்பட்ட திரண்ட இழப்பு மொத்தம் ரூ.13,545.7 கோடி. உட்காரக்கூட இடம் இல்லாமல் பேருந்துகளில் கூட்டம் முண்டியடிக்கும்போது போக்குவரத்துத் துறை எப்படி நஷ்டமடையும்? அரசு பஸ்கள் சரியாகப் பராமரிக்கப்படுவ தில்லை. தவிர, வாங்காத பொருட்களை எல்லாம் வாங்கியதாகக் கணக்கு காட்டிக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இருக்கிற வரை இந்தத் துறை மூலம் லாபம் கிடைக்காது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்