வரிச் சலுகைக்காக லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறீர்களா?

லதா ரகுநாதன்

ரு காலத்தில் அதிகமானவர்களுக்குப் பிடிக்காத ஒரு வார்த்தையாக இருந்தது ஆயுள் காப்பீடு (லைஃப் இன்ஷூரன்ஸ்) பாலிசி. பினாயில் விற்க யாராவது நம் கதவைத் தட்டினால், எப்படித் துரத்துகிறோமோ... அப்படி ஆயுள் காப்பீடு ஏஜென்ட்களை துரத்திய காலம் ஒன்றுண்டு. காரணம், ஒருவரது இறப்புக்குப் பின் இழப்பீடு கிடைக்கும் என்பதை யாரும் ரசிக்கவில்லை. ஆனால், இன்று நிலைமை எவ்வளவோ மாறியிருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், பிரிவு 80சி-ன் கீழ் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு அளிக்கப்படும் வருமான வரி சலுகை ஆகும். இந்தச் சலுகை கொண்டு வந்த மாற்றம் அபாரம். நமக்கு இல்லை என்றாலும், நம் குடும்பத்துக்கு நிச்சயம் தேவை என்று கருதும் சூழ்நிலை உருவாக, வருமான வரிச் சலுகை என்கிற அவசியம் தேவையாக இருந்தது.

யார் பெயரில் எடுத்தால் வரிச் சலுகை?

வருமான வரியை மிச்சப்படுத்த, ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

இந்த வகைக் காப்பீடுகள், வருமான வரி கட்டுபவர், மனைவி, குழந்தைகள், (இவர்கள் திருமணம் முடித்திருந்தாலும், வேலைக்கு செல்பவராக இருந்தாலும் , எவ்வளவு குழந்தைகள் ஆனாலும்) என  யார் பெயரில் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருந்தாலும் வரிச் சலுகை கிடைக்கும். பெற்றோர்களுக்கு எடுக்கும் ஆயுள் காப்பீட்டு  பாலிசிகளுக்கு வரிச் சலுகை கோர முடியாது.

நிபந்தனை தெரியுமா?

பிரிவு 80சி-ன் கீழ், இந்தக் காப்பீட்டுக்குச் செலுத்தப்படும் பிரீமியத்தில் ரூ.1.5 லட்சம் வரை மொத்த வருமானத்திலிருந்து வரி விலக்கு தரப்படும்.

இது எல்லோரும் அறிந்ததே. ஆனால், அறியாத விஷயம், மொத்த கவரேஜ் தொகையில் பிரீமியத் தொகை ஒரு நிதி ஆண்டில் 10 சதவிகிதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், இந்த 10 சதவிகிதத்துக்கு மேல் செல்லும் பிரீமியத் தொகைக்கு வரிச் சலுகை கிடையாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்