மியூச்சுவல் ஃபண்ட் ஆப்ஸ்கள்... விரல் நுனியில் முதலீட்டுத் தகவல்கள்!

எம்.கண்ணன் , முதலீட்டு ஆலோசகர்

மீப காலமாக கையில் கருப்பு கலரில் ஒரு சென்சார் கட்டிக் கொண்டு திரிகிறேன். அது, நான் எவ்வளவு தூரம் நடந்தேன், எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று என் தினப்படி வேலைகளின் தராதரத்தை எனக்குத் துல்லியமாக எடுத்துச் சொல்லிவிடுகிறது. எல்லாம் ஆப்ஸ் தரும் புண்ணியம்!

இந்தக் காலத்து யுவன்களும், யுவதிகளும் மொபைல் ஆப்ஸில்தான் குடித்தனமே நடத்துகிறார்கள். எல்லாவற்றுக்கும் ஆப்ஸ் பயன்படுத்தும் வேளையில், நம் முதலீடு தொடர்பான தகவல்களைத் திரட்டித் தருவதற்கு ஆப்ஸ்கள் வராமல் இருக்குமா என்ன?

உங்கள் ஆள்காட்டி விரலின் அடிப் பகுதியைக் கொண்டு மொபைலைத் தொட்டாலே போதும், நீங்கள் வாங்க நினைக்கும் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை எளிதாக வாங்கிவிட முடியும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இந்தியாவில் இன்னும் பலருக்கும் போய் சேரவில்லை என்று அரசாங்கம் ஆதங்கப்பட்டு வருகிறது. திட்டங்களை நடத்துபவர்களாலும் ஓரளவுக்கு மேல் எல்லா மக்களையும் இன்னும் அடைய முடியவில்லை. இந்த நிலைமை மாற எளிமையான வழி, தொழில்நுட்பம் என்கிற புதிய உலகுக்குள் நுழைவதுதான்! 

எல்லாக் கணக்கும் ஒரே கேஒய்சியில்!

நேற்றுவரை கேஒய்சி (KYC) என்பது பெரிய வேலை. இன்று அது மேகி போல மாறிவிட்டது. ஆமாம், ஆதார் அட்டையும் பான் கார்டும் இருந்தால், இரண்டே நிமிடங்களில் கேஒய்சி தயார். தற்போது கேஒய்சிக்கு புதியதொரு நடைமுறை வந்துள்ளது. வங்கி, மியூச்சுவல் ஃபண்ட், காப்பீடு என  எல்லாக் கணக்குக்கும் என்று ஒரே கேஒய்சி இருந்தால் போதுமானது. இந்த வசதி உங்கள் ஊருக்கு வந்தாச்சா...? கொஞ்சம் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்.

நாலு கேள்வியில் ஆன்லைன் இணைப்பு!

முன்பு, மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வாங்குவதற்கோ, விற்பதற்கோ அதற்குரிய படிவங்கள் நிரப்பப்பட்டு, உரிய நிறுவனத்துக்கு டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் போய்ச் சேர பல நாட்கள் ஆகும். இன்று இந்த காரியங்களை ஆன்லைன் மூலமே ஒருவர் செய்துவிட முடியும். கம்ப்யூட்டர், செல்போன் ஆப்ஸ், டேப்லெட் மூலம் அந்தந்த நிறுவனத்தின் இணைய தளங்களுக்குச் சென்று பதிவு செய்துகொள்ள முடியும்.

இந்த ஆன்லைன் வசதியைப் பெற நச்சென்று நாலே விவரங்களைக் கேட்கிறார்கள். அவற்றை சரியாகச் சொன்னால் அடுத்த நிமிடம், ஆன்லைன் இணைப்பு ரெடி.  அந்த நாலு விவரங்கள் இவைதான்... 1) மின்னஞ்சல், 2) செல்போன் எண், 3) வங்கிக் கணக்கு எண் 4) பான் அட்டை எண். நீங்கள் ஒவ்வொரு நிதி நிறுவனத்திலும் ஆன்லைனுக்காகப் பதிவு செய்யும்போது மறக்காமல் ஒரே மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்