ஒரே முறை முதலீடு Vs எஸ்ஐபி... எது பெஸ்ட்?

கேள்வி-பதில்

பல்வேறு மியூச்சுவல் ஃபண்டில் ஒரே முறையாக முதலீடு செய்வது நல்லதா அல்லது ஒரே மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது நல்லதா?

கணேசன், புதுக்கோட்டை

பாலாஜி முத்துச்சாமி, அசோஸியேட் ஃபைனான்ஷியல் பிளானர், திருப்பூர்.

“உங்கள் ரிஸ்க் எடுக்கும் திறன், நிதி ஆதாரம் மற்றும் வருமானத்துக்கு ஏற்றவாறு தேர்வு செய்யலாம். நீங்கள் நடுத்தரமான வருமானம் உள்ளவர் எனில், எஸ்ஐபி முதலீடு சிறந்த வழி. ஓரளவு அதிக வருமானம் அல்லது தொழில் மூலம் நல்ல வருமானம் வருகிறது எனில், ஒருமுறை முதலீடு நல்லது. நான்கு அல்லது ஐந்து ஃபண்டில் பிரித்து முதலீடு செய்யவும்.  மொத்தமாக, முதலீடு செய்யும் போது, சந்தையின் போக்கைப் பொறுத்து எஸ்டிபி என்கிற சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் முறையை தேர்வு செய்யவும்.”

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ரூ.50,000-ஐ ஒருமுறை மட்டும் முதலீடு செய்ய முடியுமா? அப்படி செய்தால் வரி விலக்கு  உண்டா?

செந்தில் குமார், விருதுநகர்

மனோஜ் குமார், ஆடிட்டர்

“தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ஒரு முறை மட்டும் முதலீடு செய்யும் திட்டம் அனுமதிக்கப் படுகிறது. அதேசமயம், உங்களுடைய கணக்கு செயல்பாட்டில் இருக்க, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது உங்களுடைய கணக்கில் ரூ.1,000 முதலீடு  செய்ய வேண்டும். வருமான வரிச் சட்டத்தின்படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரிவிலக்குப் பெறலாம்.”

நான் எஸ்ஐபி முறையில் ஃப்ராங்க்ளின் இந்தியா ஹைகுரோத் கம்பெனீஸ் ஃபண்டில் மாதம் ரூ.1,000 முதலீடு செய்கிறேன். ஆனால்,  ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட் வருடத்துக்கு  25% வருமானம் தந்துள்ளதாகக் கூறியுள்ளீர்கள். எது நல்ல ஃபண்ட்?

எஸ்.பிரகதீஸ்வர், முத்துகாபட்டி, நாமக்கல்

முருகன், மண்டல மேலாளர், புளூசிப் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேட் சென்டர்.


“நீங்கள் முதலீடு செய்துவரும் ஃப்ராங்க்ளின் இந்தியா ஹைகுரோத் கம்பெனீஸ் ஃபண்டிலேயே உங்கள் முதலீட்டினைத் தொடரலாம். இது லார்ஜ் கேப்பில் நல்ல ஃபண்ட். நீண்ட காலத்துக்கு இதே ஃபண்டை வைத்துக்கொள்ளலாம்.”

மாதம் ரூ.1,000 ஐந்து  ஃபண்டுகளில் முதலீடு செய்ய இருக்கிறேன். நீண்ட காலத்துக்கு ஏற்ற பண்டுகளை தெரிவிக்கவும்.

செல்வம், சேலம்.


பாரதிதாசன், நிதி ஆலோசகர்

“பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட் லைன் ஈக்விட்டி ஃபண்ட், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஃபோக்கஸ்ட் புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட், சுந்தரம் செலக்ட் மிட்கேப் ஃபண்ட், டாடா எத்திக்கல் ஃபண்ட், ஹெச்டிஎப்சி டாப் 200 ஃபண்ட் போன்ற 5 ஃபண்டுகளை முதலீட்டுக்கு தேர்ந்தெடுக்கலாம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்