விறுவிறுப்பு குறைந்துபோன வேலூர் ரியல் எஸ்டேட்

அ.அச்சணந்தி

சென்னை - பெங்களூரூ என்ற இரண்டு மாநில தலைநகரங்களுக்கு மத்தியில் வேலூர் அமைந்திருப்பதால், ரியல் எஸ்டேட்டுக்கு  முக்கியத்துவம் வாய்ந்த ஊராகப் பார்க்கப்படுகிறது. என்றாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக சொல்லிக் கொள்ளும்படி எந்த முன்னேற்றமும் வேலூர் ரியல் எஸ்டேட் துறையில் இல்லை என்கிறார்கள்  இந்தத் துறை சம்பந்தப்பட்டவர்கள். 

வேலூரில் கடந்த இருபது ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தியாகராஜனுடன் பேசினோம்.

“வேலூரைப் பொறுத்தவரை, நகரப் பகுதியில் அதிகமாக மனைகள் விற்பனைக்கு இல்லை. வேலூருக்கு வெளியேதான் வீடு மற்றும் இடம் வாங்க முடியும். வேலூர் - ஆற்காடு வழியில் ரத்தினகிரி வரையும், வேலூர் - ஆம்பூர் வழியில் அல்லாபுரம் வரையும், காட்பாடி பகுதியில் லத்தேரி, பிரம்மபுரம் போன்ற பகுதிகளும், வேலூர் - ஆரணி வழியில் அடுக்கம்பாறை, நெல்வாய், தங்கக் கோயில் உள்ள ஸ்ரீபுரம் பகுதிகளும் வேலூரில் ரியல் எஸ்டேட்டுக்கான முக்கியத்துவம் உள்ள பகுதிகள் ஆகும். புதிதாக வீடு கட்டிக் குடியேறுபவர்களின் முதல் தேர்வாக இந்த இடங்கள்தான் உள்ளன.  

அலமேலுரங்காபுரம், அல்லாபுரம், பிரம்மபுரம் போன்றவை மாநகராட்சி பகுதிகளாக உள்ளன. இந்தப் பகுதிகளில் மார்க்கெட் விலை சதுர அடி ரூ.600-லிருந்து ரூ.2500 வரை விற்பனையாகிறது. என்றாலும் கடந்த நான்கு ஆண்டுகளில் விலையில் பெரிய முன்னேற்றம் எதுவுமில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்