Gadgets

எல்.ஜி எக்ஸ் கேம் (LG X Cam)

*ஏற்கெனவே எல்.ஜி. எக்ஸ் ஸ்கிரீன் வெளியாகி இருந்த நிலையில், தற்போது புது வரவாக வந்துள்ளது எல்.ஜி. எக்ஸ் கேம்.

*தற்போதைய ஸ்மார்ட் போன்களில் ரேம்-க்கு அடுத்து, கேமராக்கள்தான் அதிகம் ஈர்க்கும் அம்சமாக உள்ளது. பெயருக்கு ஏற்றபடி கேமராவுக்கு இதில் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

*ரியர் கேமராவின் பிக்சலை மட்டும் கவனிக்காமல், 120 டிகிரி வைட் ஆங்கிள் லென்ஸையும் சேர்த்துள்ளது. இதனால் மொபைலில் 13 எம்பி ரியர் கேமராவுடன், 5 எம்பி கேமராவும் இணைந்துள்ளது.

*மற்ற ஸ்மார்ட் போன்கள் 78 டிகிரி கோண அளவுக்கே படம் பிடிக்கும். ஆனால், எக்ஸ் கேமின் கேமரா, மற்ற போன்களின் கேமராவைவிட 53% அதிக பரப்பளவை கவர் செய்யும். முன்பக்க கேமராவும் 8 எம்பி என்பதால், கேமரா ஏரியாவிலும் எக்ஸ் கேம் கில்லிதான்.

5.2 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 1080x1920 பிக்சல் ரெசொல்யூஷன் இன்-செல் டிஸ்ப்ளே, 1.14GHz ஆக்டோ ஸ்கோர் பிராசஸர், 3டி ஆர்க் கிளாஸ், 2 ஜிபி ரேம் என்பதால் கேமிங் பிரியர்களுக்கும் எக்ஸ் கேம் ஓகே. இதில் இருப்பது ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ. 16 ஜிபி இன்டெர்னல் மெமரி இருக்கிறது. 4G VoLTE தொழில்நுட்பம் இருக்கிறது. 2520mAh நான்-ரிமூவல் பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், நாம் எடுக்கும் போட்டோக்களை சிறிய வீடியோ போல மாற்றிக்கொள்ள பாப் அவுட் இமேஜ் (Pop out Image) என்ற ஆப்ஷன் உள்ளது.

118 கிராம் எடை, 6.9 மி.மீ. தடிமன், டிசைன் என அசத்தும் எக்ஸ் கேம், போட்டோ பிரியர்களுக்கு நல்ல சாய்ஸ்!

விலை

19,990 ரூபாயில் இருந்து கிடைக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்