வியாபாரச் சிறுகதை!

அவன் பெயர் முத்தழகு!பார்த்தசாரதி ரெங்கராஜ்

நான் சதீஸ் குமார். 33 வயது நிறைவடைய இன்னும் சில நாட்கள் உள்ளன. மிதமான உயரம், மிதமான நிறம், கூர்மையான பார்வை, சர்ஃப் எக்செல் எலுமிச்சை நறுமணத்துடன் எப்போதும் மிடுக்கான உடை, கடந்து செல்லும் யாரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் யார்ட்லி பாடி ஸ்பிரே, தோளில் தொங்கவிட்டிருக்கும் காஸ்ட்லி லேப் டாப்...

கணிக்க முடிந்ததா நான் யார் என்று. கரெக்ட், நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் சேல்ஸ் மேனேஜர்.  எனது வேலை மாடு மேய்ப்பது அல்ல என்று உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் ஏன் எப்போதும் அப்படி ஒரு அவமரியாதையுடன் என் போன்றவர்களைப் பார்க்கவேண்டும்?
சரி... அதில்லை விஷயம், அதைப் பற்றி நாம் இன்னொரு நாள் அடித்துக்கொண்டு சாவோம். இன்று எனக்கு வேறொரு பிரச்னை. நேற்று எனக்கு வந்த டெலிபோன் அழைப்புதான் என் பிரச்னைக்கு மூல காரணம்.

நண்பர்களும், வாடிக்கையாளர்களும் எனது செல்போனுக்கே அழைத்துப் பேசுவார்கள்.  நேற்று எனது அலுவலக டெலிபோனுக்கு யாரோ அழைத்து, எனக்கு இணைப்பு வழங்கப்பட்டது.

யாருக்கோ என் சேவை தேவை. அதனால் என் அலுவலக நம்பரை எல்லோ பேஜில் பார்த்து என்னைப் பிடித்திருக்கிறார்.

“குட் மார்னிங், சதீஸ் ஹியர்’’ என்றேன், மறு முனையில் ஒரு பெண். அருமையான குரல்.  அவளுடைய நிறுவனத்தின் பெரிய தலை என்னைப் பார்க்க வேண்டுமாம்;  எதற்கு என்று நான் கேட்கவில்லை. அவர்களுடைய அலுவலகத்துக்கு வந்து பேச முடியுமா என்று கேட்டாள் அந்தப் பெண்.

யார் இவர்கள், ஏன் என்னை அழைக்கிறார்கள்? அவர்களுக்கு ஏதாவது ஒர்க் ஷாப் இருக்கலாம்.   அல்லது நான் செய்யும் ஆயில் வியாபாரம் தொடர்பாக என்னை அழைத்திருக்கக்கூடும். இருப்பினும் எனக்கு கீழ் ஒரு அ........., ஸாரி, அப்படி சொல்வது சரியல்ல; எனக்கு உதவி செய்ய ஒரு டீம் உள்ளது. அவர்களைக் கூப்பிட்டிருக்கலாம். 

என்னை அழைத்ததன் காரணம் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பினேன் . “எங்க சார், உங்க பழைய நண்பராம்’’ என்றது அந்த முகம் தெரியாத குயில். கண்டிப்பாக அவளுடைய சார், அந்த ஒர்க் ஷாப் மேனேஜராக இருக்கவேண்டும்.
‘‘அவருடைய பெயர் என்ன..?’’ என்று கேட்டேன்.

‘‘முத்தழகு சார்’’.

அந்தப் பெயரைக் கேட்டவுடன், “இந்த இடத்தில் நான் நிமிர்ந்து அமர்ந்தேன். காரணம், இந்த முத்தழகு என்னிடம் வேலை செய்வதற்காக ஒரு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவன்.

புரிகிறதா, இதுதான் என் குழப்பம். அவனைப் பார்ப்பதில் என்ன குழப்பம்? இருக்காதா, சில வருடங்களுக்குமுன் என்னால் நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்படாமல் வெளியேற்றப்பட்டவன், இன்று என்  வாடிக்கையாளராகி என்னையே வந்து பார்க்கும்படி அழைக்கிறானே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்