கம்பெனி ஸ்கேன்: டெக்னோ எலெக்ட்ரிக் அண்ட் இன்ஜினீயரிங் கம்பெனி!

(NSE SYMBOL: TECHNO)

டெக்னோ எலெக்ட்ரிக் அண்ட் இன்ஜினீயரிங் கம்பெனி லிமிடெட் 1963-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்.கொல்கத்தாவை, தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், மின்சாரம் மற்றும் மின்சார டிஸ்ட்ரிப்யூஷன் துறையில், இன்ஜினீயரிங் மற்றும் கட்டுமான செயல் பாடுகளில் ஈடுபட்டுவரும் ஒரு நிறுவனமாகும்.

இன்ஜினீயரிங், ப்ரொக்யூர்மென்ட் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் பிரிவிலும் (EPC), பப்ளிக்-பிரைவேட் பார்ட்னர்ஷிப் முறையில் பில்ட்-வோன்-ஆப்ரேட்- ட்ரான்ஸ்பர் (BOOT) மற்றும் பில்ட்-வோன்–ஆப்ரேட்–மெயின்டெயின் (BOOM)  பிரிவிலும்,  சோலார் போன்ற ரினியூவபிள் எனர்ஜி பிரிவிலும் செயல்படுகிறது இந்த நிறுவனம்.

இன்றைக்கு இந்திய மின்சார உற்பத்தி மற்றும் மின்சார ட்ரான்ஸ்மிஷன் துறையில் குறிப்பிடத்தக்க அளவில் தன்னுடைய சேவைகளைச் செய்துவரும் நிறுவனமாக இது திகழ்கிறது.  நிறுவனத்தின் தொழில் பிரிவுகள் என்று பார்த்தால், இபிசி,  மின்சார உற்பத்தி செய்யும் நிலையங்கள்/வசதிகளை சொத்தாக வைத்திருத்தல் (அஸெட்), மின் உற்பத்தி நிலையங்களை இயக்குதல் மற்றும் பராமரித்தல் போன்ற மூன்று பெரிய தொழில் பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

மார்ச் 2016-ல் முடிவடைந்த நிதியாண்டின் இறுதியில், முன்னூறுக்கும் மேற்பட்ட  புராஜெக்ட்களை முடித்துக்கொடுத்து ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. இந்த நிறுவனத்தில், இன்ஜினீயரிங் துறை சார்ந்த வல்லுநர்களின் சராசரி அனுபவம் 25 வருடங்களாக இருப்பது குறிப்பிடத் தக்க ஒரு விஷயமாகும்.

இந்த நிறுவனத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் மின்சார உற்பத்தி மற்றும் ட்ரான்ஸ்மிஷன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன. மரபுசார் மின்சாரம் (Conventional)  மற்றும்  புதுப்பிக்கத்தக்க  ஆற்றல் வகை (Renewable)  மின்சார உற்பத்தி என்ற இரண்டு பிரிவிலும்  முழுமையான சேவைகளை வழங்கும் நிறுவனமாக இந்த நிறுவனம் திகழ்வதால், ஒரு முறை வாடிக்கை யாளராக வந்தவர்கள் தொடர்ந்து வாடிக்கையாளராக இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

வியாபாரத்துக்கான வாய்ப்புகள் என்று பார்த்தால், பொருளாதார ரீதியாக வளரும் நாட்டில் மின்சாரத்துக்கான தேவை என்பது அதிகரிக்கவே செய்யும். இந்தியாவைப் பொறுத்தவரை,  12-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மெகாவாட் அளவிலான மின் உற்பத்தி அதிகரிப்புக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு  மின்சார உற்பத்தி அதிகரிக்கிறதோ, அதே அளவுக்கான ட்ரான்ஸ்மிஷன் தேவையும் அதிகரிக்கவே செய்யும். 

இந்தியாவைப் பொறுத்தவரை, 2022-ம் ஆண்டளவில் மின்சார உற்பத்தி இலக்காக சுமார்  388 கிகாவாட் அளவு வளர வாய்ப்புள்ளது. இந்த அளவு மின் உற்பத்தி அதிகரித்தால், அதற்கு ஈடாக மின்சாரம் ட்ரான்ஸ்மிஷன் செய்யும் வசதி கட்டுமானங்களும் அதிகரிக்கப்பட வேண்டும். ட்ரான்ஸ்மிஷன் வசதிகளை அதிகப்படுத்த தனியாரின் பங்களிப்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்