கூடுவாஞ்சேரி புறநகர் பேருந்து நிலையம்... தென் மாவட்ட மக்களுக்குப் பாதிப்பா?

பிரம்மா

ர் அறிவிப்பு, 2013 ஏப்ரல் மாதம், சென்னைக்குப் பக்கத்தில் இருக்கிற வண்டலூரைச் சுற்றியுள்ளவர்களை சந்தோஷப்படுத்தியது. அதே அறிவிப்பு, ஆகஸ்ட் 2016-ல் கூடுவாஞ்சேரியைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மகிழ்ச்சியின் இடப்பெயர்ச்சிக்கு முக்கிய காரணம், புறநகர் பேருந்து நிலையம்தான்.

வண்டலூர்!

2013-ம் வருடம்... ‘கோயம்பேடைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் ரூ.376 கோடி திட்டத்தில் தொடங்கப்படும்’ என சட்ட மன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கென ஜிஎஸ்டி சாலையில் இடமும் தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் பெரும் வளர்ச்சி கண்டது. புறநகர் பேருந்து நிலையத்துக்கு என வண்டலூர் பகுதிகளில் புதிய மேம்பாலங்களும் சுற்றுச்சாலைகளும் அமைக்கப்பட்டன. ஜிஎஸ்டி சாலைக்கும் ஜிஎன்டி சாலைக்கும் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, வண்டலூர் வரும் வாகனங்களை பிரித்துவிடுவது என திட்டங்கள் வகுக்கப்பட்டன.

மூன்று வருடங்களில், சுமார் 70 சதவிகிதமான நிலங்கள் கையப்படுத்தப்பட்டு நடைபெற்ற பணிகளின் காரணமாக, வெளிவட்டச் சாலையைச் சுற்றி ரியல் எஸ்டேட் தொழில்கள் வளர்ச்சி அடைந்தன. மொத்தம் 29 கி.மீ கொண்ட இந்தச் சாலையின் பகுதிகள் உள்வட்டச் சாலை மூலமாக வளர்ச்சி அடைந்த பகுதிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இதற்காக நிறைய பணம் செலவழிக்கப்பட்டபின், தற்போது ‘புறநகர் பேருந்து நிலையம் வண்டலூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்படும்’ என்று அரசு அறிவித்துள்ளது.

வண்டலூர் டு கூடுவாஞ்சேரி!

வண்டலூரில்  நிலங்களை கையகப்படுத்துவதில் உள்ள பிரச்னை காரணமாக புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்படுவதாகச் சொல்லப்படுகிறது. கூடுவாஞ்சேரி, நந்திவரம் பகுதியில் 60 ஏக்கர் கையகப்படுத்தப்பட உள்ளது.

கூடுவாஞ்சேரிக்கு புறநகர் பேருந்து நிலையம் மாற்றப்படுவதால், வண்டலூரைச் சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சி அடைந்ததுபோல, தற்போது கூடுவாஞ்சேரி பகுதியை முன்வைத்து சுமார் 2000 ஏக்கர் பெரும் வளர்ச்சி அடையும் எனலாம். ஏற்கெனவே வளர்ச்சி கண்டுள்ள வண்டலூர், கூடுவாஞ்சேரி பகுதிகள், ஜிஎஸ்டி சாலையின் உள்புற பகுதிகள், வண்டலூர், கேளம்பாக்கம், ஓஎம்ஆர் சாலை மற்றும் படப்பை, ஓரகடம் வழியாக சிங்கப்பெருமாள் கோவில் வரை இந்த வளர்ச்சி வேகம் அடையும் என்றும் கூறப்படுகிறது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்