பணத்தை மிச்சப்படுத்தும் பசுமை வீடுகள்!

ன்றைக்கு நம் பட்ஜெட்டில் கணிசமான பணத்தைச் சாப்பிட்டுவிடுகிறது வீட்டுப் பராமரிப்புக் கான செலவு. ஒரு மாதத்துக்கு கரன்ட் பில் ரூ.1,000, குடிதண்ணீர் செலவு ரூ.750 என நம் வருமானத்தில் 5 முதல் 10 சதவிகிதம் இது மாதிரியான கட்டணங்களைச் செலுத்தவே செலவாகி விடுகிறது.

காலம் செல்லச் செல்ல இந்தச் செலவுகள்  எகிறிக்கொண்டுதான் இருக்கின்றன. இது போன்ற சில மாதாந்திர செலவுகளைக் கட்டுப்படுத்த ஒரே வழி, பசுமை வீடுகள்தான். சுத்தமான காற்றும், சூரிய வெளிச்சமும் இல்லாமல் நகர நெரிசலில் புறாகூண்டு வீட்டுக்குள் சிக்கிச் சீரழிந்துகொண்டிருக்கும் பெரும்பாலான மக்களின் இந்தப் பிரச்னைக்கு எளிதான தீர்வு பசுமைத் தொழில்நுட்பத்தில் கட்டப்படும்  வீடுகள்தான். 

பசுமை வீடுகள் என்றவுடன், நீங்கள் நினைப்பது போல, அரசாங்கம் கட்டித் தரும் பசுமை வீடுகள் அல்ல. குடியிருக்கும் வீட்டில் குறைந்த அளவு தண்ணீரையும், அதிக அளவு வெளிச்சத்தையும் பயன்படுத்துகிற மாதிரி வீடுகளைக் கட்டி இயற்கையைப் பாதுகாக்க உதவுவதே ‘பசுமை வீடுகள்’. இந்த வீடுகளால் இயற்கை மட்டுமல்ல, இந்த வீடுகளில் குடியிருப்போரும் அதிகம் பயனடைந்து வருகிறார்கள்.

சென்னையை அடுத்த  தாம்பரம் அருகே  ஒட்டியம்பாக்கத்தில் அபார்ட்மென்ட்டில் வாங்கிய பசுமை வீட்டில் வசித்து வரும் சரவணன், அந்த வீட்டைப் பற்றி ஆர்வமாக நம்மிடம் பேசினார். “நான் பசுமை வீடு வாங்க முடிவு செய்தபோது,  செங்கல் இல்லாமல் கட்டுவோம் என்று பில்டர் சொன்னதைக் கேட்டு,  எனக்கு சின்னத் தயக்கம் இருந்தது. ஆனால் ‘போரோ தெர்ம்’ பிளாக்ஸைப் பற்றி சொன்னவுடன், அந்தத் தயக்கம் விலகிவிட்டது. அதுமட்டுமன்றி வீட்டின் ஜன்னல்கள், மொட்டை மாடி தளங்கள், இடைவெளி விட்டுக் கட்டப்பட்ட  சுற்றுச்சுவர், மழைநீரை  சேகரித்து உபயோகப்படுத்தும் முறை என அனைத்தும் இங்கே இருக்கிறது. இதனால் மின்சாரம், குறிப்பாக ஏ.சி பயன்பாடு குறைகிறது” என்றவர், பசுமை வீட்டைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு பொருளைப் பற்றியும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

நோ செங்கல், ஒன்லி ‘போரோ தெர்ம்’ பிளாக்ஸ்!

செங்கல்லினால் கட்டப்படும் கட்டடங்கள் மிகவும் உறுதியானதாகவும் தரமாகவும் இருக்கும். ஆனால், வெயில் காலத்தில் வீட்டுக்குள் வெப்பத்தை  நுழைய விட்டுவிடும். மாற்றாக, ‘போரோ தெர்ம்’ பிளாக்ஸை உபயோகித்துக் கட்டினால், வெயில் காலத்தில் வெப்பம் வீட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும். இதில் ஒரே பிரச்னை, ஆணி அடிக்கும்போது மெதுவாக அடிக்க வேண்டும். மற்றபடி செங்கல்லுக்கு இணையான உறுதித்தன்மையும், தரமும் இதில் இருக்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்