News பிட்ஸ்

அடக்கி வாசிக்கும் ஆர்.பி.ஐ.! 

மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பதவியேற்றிருக்கும் உர்ஜித் பட்டேல், முந்தைய கவர்னர் ரகுராம் ராஜனுக்கு நேரெதிர். முதலில், பதவியேற்பு விழாவை எந்த ஆர்பாட்டமும் இல்லாமல், மிகமிக எளிமையாகச் செய்து முடித்திருக்கிறார். தான் எங்கே போனாலும் தனக்குப் பாதுகாப்புத் தருவதற்காக போலீஸார் வரவேண்டியதில்லை என்று சொல்லிவிட்டார். பதவியேற்ற நாளான்றே மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போனவர், போலீஸ் பாதுகாப்பு இல்லாமலே போனதாகத் தகவல்.  பதவியேற்றபின் ஆர்.பி.ஐ. ஊழியர்களுக்கு புதிய கவர்னர் என்கிற முறையில் இ-மெயில் மூலம் ஏதாவது செய்தி அனுப்புவது வழக்கம். அதையும் உர்ஜித் செய்யவில்லை. கூச்ச சுபாவம் அதிகமுள்ள உர்ஜித், கூட்டங்களில் கலந்து கொண்டு பேசவும்  தயக்கம் காட்டி வருகிறார்.

இவர் எப்போது திருவாய் மலர்வாரோ, முதலில் எதைப் பற்றி பேசுவாரோ என்று பலரும் காத்துக் கிடக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்